புதுவையில் கைதான கொலையாளிகளுக்கு ஆந்திர நக்சலைட்டுகளுடன் தொடர்பு?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் நேற்று துப்பாக்கிச் சண்டை போட்டு பிடிக்கப்பட்ட 2 கூலிப்படை கொலையாளிகளுக்கும் ஆந்திரநக்சலைட்டு தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
சுமார் 13 கொலை வழக்குகளில் தொடர்புடைய திருச்சியைச் சேர்ந்த பாரதி மற்றும் செல்வம் ஆகிய இருரவுடிகளும் கடந்த ஏழு மாதங்களாக பாண்டிச்சேரியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஒரு பெண் மற்றும்குழந்தையுடன் தங்கியிருந்தனர்.
இவ்விஷயம் திருச்சி போலீசாருக்குத் தெரிய வந்தது. உடனே அங்கு விரைந்த திருச்சி போலீசார் பாண்டிச்சேரிபோலீசாருடன் சேர்ந்து கொண்டு அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
பின்னர் ஐந்து மணி நேரம் அந்த ரவுடிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைநடைபெற்றது. இதைத் தொடர்ந்து மைக் மூலம் பேசிய போலீசார் அந்த ரவுடிகளை சரணடையும்படி கூறினர்.
இதையடுத்து செல்வமும் பாரதியும் தங்கள் சட்டைகளைக் கழற்றி விட்டு கைகளை மேலே தூக்கியவாறுபோலீசாரிடம் சரணடைந்தனர்.
இதன் பிறகு நேற்று இரவு விடிய விடிய அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த இரண்டு கொலையாளிகளுக்கும் ஆந்திர நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதுவிசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
மேலும் பலவிதமான வெடிகுண்டுகளைத் தயாரித்து இயக்குவதில் பாரதி கைதேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது.அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த இரண்டு கொலையாளிகளிடமும் விசாரணை நடத்துவதற்காக சென்னை மற்றும்மதுரையிலிருந்தும் தனிப் படை போலீசார் பாண்டிச்சேரிக்கு விரைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications