இது கருத்துரிமை போர்: வீரபாண்டியன்
சென்னை:
தமிழகம் கருத்துரிமைப் போர்க் களத்தில் நின்று கொண்டிருக்கிறது என தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன்கூறினார்.
இந்த இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் நடத்துவது குறித்து தமிழ்ஆர்வலர்கள், ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோனையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
நெடுமாறன் கைது குறித்து விவாதிக்க நாளை தமிழர் தேசிய இயக்கத்தின் நிர்வாகக் குழு அவசரமாகக் கூடுகிறது. முன்னதாக நிருபர்களிடம்பேசிய வீரபாண்டியன்,
தமிழகம் இன்று கருத்துரிமைப் போர்க் களத்தில் நின்று கொண்டிருக்கிறது. பொடா சட்டத்தின் கீழ் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதைமிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் எங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் பாதையில் இருந்து விலகி ஓட மாட்டோம்.
எங்கள் கொள்கைளை விட்டுவிட்டு அஞ்சி ஒதுங்க மாட்டோம். நெடுமாறனின் கைதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஜனநாயகரீதியில்போராட்டம் நடத்துவது குறித்து நாளை நடக்கும் எங்கள் இயக்கத்தின கூட்டத்தில் முடிவெடுப்போம் என்றார்.
நெடுமாறன் பொடாவில் நேற்று முன் தினம் கைதாகியுள்ள நிலையில் வீரபாண்டியனுக்கு புலிகள் ஆதரவு வழக்கில் 2 ஆண்டு சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பு நேற்று மாலை வெளியானது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications