ஸ்வாகா செய்த சிலரின் விவரம்
டெல்லி:
பெட்ரோல் பங்குகள், மண்ணெண்ணெய் ஏஜெனசிகள், கேஸ் ஏஜென்சிகலை சுருட்டியுள்ள பா.ஜ.கவினர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் லக்னொவைச் சேர்ந்த பிரதமர் வாஜ்பாயின் உறவினரான ராஜ் மிஸ்ராவின் மனைவி அபர்ணா மிஸ்ரா.
இவர் பிரதமர் வாஜ்பாயின் லக்னோ இல்லத்தில் வசித்து வருகிறார். லக்னோவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள இடானுஜா என்ற இடத்தில் இவருக்கு பெட்ரோல் பங்க் ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்றவர்கள் விவரம்:
உத்தரப் பிரதேச முன்னாள் பா.ஜ.க முதல்வர் ராஜ்நாத் சிங்கின் உறவினரும் அவரது தனி அதிகாரியுமான காரக் பகதூர் சிங்.
பா.ஜ.க. எம்.பி ஷியாம் பிகாரி மிஸ்ராவின் மகன் முகுல் மிஸ்ரா.
பா.ஜ.க எம்.பி ராம் பக்ஸ் வர்மாவின் மகன் அலோக் குமார் வர்மா.
உ.பி. பா.ஜ.க. அமைச்சர் ராம் பிரகாஷ் திரிபாதியின் மருமகள் பிரதிபா.
உ.பி. பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரேம் லதா கத்யாரின் மருமகள் ஆஷா.
உ.பி. பா.ஜ.க. அமைச்சர் அசேர்வால் கவுரின் மகன் ஆனந்த் குமார்.
பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சூர்ய பிரதாப் சாகியின் மனைவி ராணி.
உ.பி. பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜிவ் குமார் சிங்கின் மகன் ரிதேஷ் குமார்.
பா.ஜ.க. எம்.பி பைஜ்நாத் ராவத்
பா.ஜ.க. எம்.பி பாதம் சென் சவுத்ரியின் உறவினரான பூனம் சிங்.
முன்னாள் பா.ஜ..க. எம்.பி. ராஜேந்திராவின் மனைவி சரோஜ்
உ.பி. மாநில பா.ஜ.க செயலாளரும் எம்.பியுமான பூர்ணிமா வர்மா.
பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் சந்த்தின் மகன் விகாஸ்.
பா.ஜ.க. செயற்குழு உறுப்பினரான புட்டிலால் யாதவின் மகன் ஓ.பி. யாதவ்.
பா.ஜ.க. விவசாயிகள் பிரிவு நிர்வாகியான ஹரிநாம் சிங்கின் மனைவி சுமன்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான அன்தர்யாமி சிங்.
இன்னொரு ஆர்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகர் காமேஸ்வர் சிங்.
உ.பி பா.ஜ.க. மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான சந்தோஷ் குமார் குப்தாவின் மனைவி முன்னி.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரதன்லால்
பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. பன்வாரி லால்
பா.ஜ.க. இளைஞரணி துணைத் தலைவர் சக்தி சிங்கின் தாயார் நிதி சிங். சக்தி சிங்குக்கு மத்திய அரசின் மனித வளத்துறையும் ஒரு புராஜெக்டைக் கொடுத்து பணத்தையும் கொடுத்து உதவியுள்ளது.
பா.ஜ.க. எம்.பி. சத்ரபால் சிங்கின் மகன் ஹேமந்த் குமார்.
உ.பி. பா.ஜ.க. மாவட்ட மகளிர் பிரிவின் தலைவி கீதா பாண்டே.
பா.ஜ.க. கவுன்சிலர் ஆர்.கே. சர்மாவின் மகன் சுனில்.
இப்படி இந்தப் பட்டியல் போய்க் கொண்டே இருக்கிறது.........
பாரத ரத்னா விருது பெற்ற பிரபல இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தனக்கு ஒரு பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் கேட்டு பிரதமர் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் ராம் நாயக்கை சந்தித்து விண்ணப்பம் தந்தார்.
பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு இது போன்ற விஷயங்களில் முன்னுரிமை தரப்படுவதுண்டு. ஆனால், இவருக்கு இதுவரை பங்க் ஏதும் தரப்படவில்லை.
மொத்தம் ஒதுக்கப்பட்ட 3, 158 உரிமங்களில் உண்மையான கார்கில் வீரர்கள் குடும்பத்துக்குப் போய் சேர்ந்தது 245 பெட்ரோல் பங்குகளும் 147 கேஸ் ஏஜென்சிகளும் மட்டுமே. மற்றவை எல்லாம் பா.ஜ.கவினரால் பங்கு போடப்பட்டுள்ளன.
ராஜினாமா செய்ய மாட்டேன்: ராம் நாயக்
இந் நிலையில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை, பெட்ரோலிய துறையின் கமிட்டி தான் இந்த உரிமங்களை வினியோகித்தது. எனவே, நான் ராஜினாமா செய்ய மாட்டேன். இந்த விவகாரத்தில் நீதி விசாரணையோ, சி.பி.ஐ. விசாரணையோ தேவையில்லை என ராம் நாயக் இன்று நிருபர்களிடம் கூறினார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications