திருச்சி, தஞ்சை போலீசாரிடம் குறை கேட்டார் ஜெ.
சென்னை:
போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியின் 3வது கட்டமாக திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலப் போலீசாரிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று குறை கேட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக போலீசாரிடம் குறை கேட்கும் திட்டம் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த 1,622 போலீசார் அன்று ஜெயலலிதாவை நேரில் தனித் தனியாகச் சந்தித்து தங்களுடைய குறைகளைக் கூறி மனுக்களையும் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி மேற்கு மண்டலத்தின் சுமார் 1,700 போலீசார் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களுடைய குறைகளைத் தெரிவித்தனர். சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையினரும் அன்று ஜெயலலிதாவிடம் மனுக்களைக் கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை மூன்றாவது கட்டமாக மத்திய மண்டலத்தைச் சேர்ந்த போலீசார், சிறைத் துறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களுடைய குறைகளைத் தெரிவித்தனர்.
சுமார் 1,212 போலீசார் நீண்ட வரிசையில் நின்று கொண்டு ஐந்தைந்து பேராகச் சென்று தங்களுடைய குறைகளையும் கோரிக்கைகளையும் ஜெயலலிதாவிடம் தெரிவித்து இது தொடர்பாக மனுக்களையும் அவரிடம் அளித்தனர்.
முன்னதாக போலீசாரிடம் ஜெயலலிதா பேசுகையில்,
நாட்டு நலன் கருதி பணியாற்றி வரும் போலீசார் மன நிறைவுடனும் உற்சாகத்துடனும் இருப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி வைப்பது என்னுடைய கடமை என்றார் ஜெயலலிதா.
அடுத்த கட்டமாக வரும் புதன்கிழமை (ஆகஸ்டு 7) வடக்கு மண்டலப் போலீசாரிடமும் சென்னை போலீசாரிடமும் ஜெயலலிதா குறை கேட்கவுள்ளார் ஜெயலலிதா.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications