அமெரிக்காவை கலக்கும் இந்தியரின் படம்
லாஸ் ஏஞ்ஜெல்ஸ்:
டைரக்டர் மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கியுள்ள சைன்ஸ் திரைப்படம் வசூலைக் குவிக்க ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா டாப்10ல் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாண்டிச்சேரியில் பிறந்த மனோஜ் வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் தான். பென்சில்வேனியாவில் வசித்து வருகிறார்.
இவரது சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் 2 ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து வந்த அன்பிரேக்கபிள் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால், சைன்ஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் வயல்வெளிகளில் திடீர் திடீர் என மிகப் பெரிய வட்டக் குறியீடுகள் தோன்றுகின்றன. இந்தக் குறியீடுகளை உருவாக்கியது யார்? இதன் மர்மம் என்ன? இது வெளிகிரகவாசிகளின் செயலா? என்பதை விளக்குவது தான் கதை.
ஷியாமளனின் முந்தைய படங்களும் பேய்கள், அதிசயங்கள், மர்மங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியானவை தான். மெல் கிப்சன் உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ள சைன்ஸ் படம் அமெரிக்காவில் வெளியான 2 தினங்களில் 60.3 மில்லியன் டாலரை ஈட்டிவிட்டது.
ஷியாமளனின் முந்தைய படங்களைவிட இதன் வசூல் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அடுத்த வாரம் இந்தப் படம் வெளியாகிறது.
நியூஸ் வீக் இதழ் இவரை ஸ்டீவன் ஸபீல்ஸ்பெர்குக்கு இணையான கலைஞர் என வர்ணித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications