கவுஸ் பாட்சா !
சென்னை:
போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்று சென்னையில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வரும் கவுஸ் பாட்சா உடனடியாக சரணடைய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் விஜய்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரவில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதில் பலே கில்லாடி கவுஸ் பாட்சா. இவனை நீண்ட தேடலுக்குப் பின் போலீசார் மடக்கினர். ஆனால், சமீபத்தில் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றான்.
தப்பியதோடு நிற்காமல் சென்னையில் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டான். திருமங்கலம், கே.கே. நகர் ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் இரவு அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களை கவுஸ் பாட்சா தான் நடத்தியுள்ளான் என்று தெரியவந்துள்ளது.
அவனது கைரேகைகள் இந்த இரு இடங்களிலும் பதிவாகியுள்ளன. அவனைப் பிடிக்க பல தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவன் சிக்காமல் தப்பி வருகிறான்.
ஒவ்வொரு இரவிலும் இன்று அவன் எந்த வீட்டில் கைவரிசையைக் காட்டுவானோ என சென்னை போலீசார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்காரும் நிலையை உருவாக்கியுள்ளான்.
இதையடுத்து அவன் உடனடியாக சரணடைய வேண்டும், இல்லாவிட்டால் கண்டவுடன் சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை உருவாகும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து இன்று நிருபர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் விஜய்குமார்,
போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்று காவல்துறைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளான் கவுஸ் பாட்சா. அவனைத் தப்பவிட்ட போலீசாருக்கு கெடு விதித்துள்ளேன். அவனை உடனே பிடித்துக் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளேன்.
பல தனிப் படைகளும் அவனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கவுஸ் பாட்சா சரணடைந்துவிடுவது அவனுக்கு நல்லது. இல்லாவிட்டால் நாங்கள் எக்ஸ்ட்ரீம் நடவடிக்கையில் இறங்குவோம். அது என்ன என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications