அமர்நாத்தில் கொல்லப்பட்ட திருவண்ணாமலை பக்தரின் உடல் தகனம்
திருவண்ணாமலை:
அமர்நாத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாலசந்திரன் என்றபக்தரின் உடல் இன்று அதிகாலை திருவண்ணாமலையில் தகனம் செய்யப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை காஷ்மீரில் உள்ள பகல்காம் அருகே அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கியிருந்துமுகாமுக்குள் நுழைந்து ஒரு தீவிரவாதி சராமாரியாகத் துப்பாக்கியால் சுட்டான்.
இந்தத் திடீர்த் தாக்குதலில் தூங்கிக் கொண்டிருந்த 8 பக்தர்கள் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் வரை குண்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட ஒன்பது பேரில் தமிழக பக்தரும் ஒருவர். இந்தியன் வங்கி ஊழியரான அவர் பெயர்பாலசந்திரன். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்.
பாலசந்திரனின் உடல் நேற்று திருவண்ணாமலைக்குக் கொண்டுவரப்பட்டது. இன்று காலை வரை அவருடையஉடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
ஏராளமான மக்கள் பாலசந்திரனின் வீட்டுக்கு வந்து அவருடைய உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை பாலசந்திரனின் உடன் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்குஇறுதிச் சடங்குகள் செய்து முடிக்கப்பட்ட பின்னர் அவருடைய உடலுக்கு மூத்த மகன் தீ மூட்டினார்.
அமர்நாத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications