நாளை டெல்லியில் காவிரி கூட்டம்: தமிழகம் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாளை டெல்லியில் கூடும் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் தமிழகமும்கலந்து கொள்கிறது.

காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்து விட மறுத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டாவிவசாயிகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் போனது.

எனவே உடனடியாக காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்றும் நீர் திறந்து விட மறுத்தகர்நாடக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்சமீபத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஜூலை 29ம் தேதி வழங்கப்பட்டது. வரும் 12ம் தேதிக்குள் காவிரி கண்காணிப்புக்குழு கூடி அதற்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் தமிழக, கர்நாடக அணைகளில் உள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

.இந்த நீர் நிலைகளை ஆய்வு செய்த பின்னர் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்திடம்அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் காவிரி கண்காணிப்புக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நாளை (ஜூலை 9) டெல்லியில் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நடக்கிறது. தமிழகம், கர்நாடகம்,கேரளம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி தமிழக அரசின் தரப்பிலான வாதங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஜெயலலிதா தலைமையில்அமைச்சரவை இன்று கூடியது. அமைச்சர்கள் தவிர தமிழக அரசின் தலைமை செயலாளர் சுகவனேஸ்வர் உள்ளிட்டஅதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறுகையில்,

காவிரி ஆணையக் கூட்டத்திலோ அல்லது கண்காணிப்புக் குழுக் கூட்டத்திலோ தமிழக அரசு கலந்து கொள்ளாதுஎன்று முன்பு கூறியிருந்தேன்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப அவற்றில் கலந்து கொள்ள வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது.இதைத் தவிர எங்களுக்கும் வேறு வழியில்லை.

எனவே இது குறித்து அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்தோம் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+