ராகிங்கை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
புதுக்கோட்டை:
ராகிங் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் புதுக்கோட்டை அரசு கலைக் கல்லூரியின் பிற்பட்ட வகுப்புமாணவர்களுக்கான விடுதி தாக்கப்பட்டது. இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தக் கல்லூரியைச் சேர்ந்த முதலாமாண்டு வகுப்பு மாணவர் நாகராஜ் என்பவர் இரண்டாமாண்டு மாணவர்களால்ராகிங் செய்யப்பட்டார்.
இதையடுத்து மூன்றாமாண்டு படிக்கும் தனது நண்பர் கார்திக்கிடம் கூறியுள்ளார் நாகராஜ்.
உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் சென்ற கார்த்திக் ராகிங்கில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்.இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான விடுதியில் புகுந்து சிலமாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இங்கு தான் கார்த்திக் தங்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் சில மாணவர்கள்காயமடைந்தனர்.
இதையடுத்து அங்கு உடனடியாக போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.ஆகியோரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விடுதிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தான் திருச்சி ஈ.வே.ரா. அரசு கலைக் கல்லூரியில் ராகிங்கைத் தட்டிக் கேட்ட அழகர்சாமி என்றமாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இந்நிலையில் புதுக்கோட்டையிலும்ராகிங் தொடர்பாக மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications