மார்த்தாண்டத்தில் அதிருப்தியாளர்கள் போட்டி மாநாடு
நாகர்கோவில்:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தை எங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது என்றுஅதிருப்தி தமாகா எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் கூறினார்.
மதுரையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் நாளை அக்கட்சியுடன் தமாகாஇணையவுள்ள நிலையில் மார்த்தாண்டத்தில் அதிருப்தி தமாகா எம்.எல்.ஏக்கள் போட்டி மாநாடு நடத்துகின்றனர்.தாங்கள் தான் உண்மையான தமாகாவினர் என்பதையும் அவர்கள் அந்த மாநாட்டில் அறிவிக்கவுள்ளனர்.
இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் குமாரதாஸ் பேசுகையில்,
தமாகா-காங்கிரஸ் இணைப்பை எதிர்க்கும் உண்மையான தமாகா தொண்டர்களுக்குத் தான் சைக்கிள் சின்னமும்தமாகா கொடியும் சொந்தமானது. தேவைப்பட்டால் இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்கப்படும்.
அந்த இரண்டையும் வாசன் போன்றவர்கள் உபயோகிக்க முடியாது. மூப்பனார் எதற்காக கட்சியைஆரம்பித்தாரோ, அந்த நோக்கத்தையே வாசன் குழி தோண்டிப் புதைத்து விட்டார்.
மூப்பனார் மறைவுக்குப் பின் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் எழுவதைத் தடுக்கவே வாசனைத் தலைவராக்கினோம்.ஆனால் அவரோ காங்கிரஸ் கட்சியிடம் தமாகாவை விற்று விட்டார்.
மார்த்தாண்டத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி (நாளை) நடைபெறும் மாநாட்டுக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து முடிவெடுப்போம் என்றார் குமாரதாஸ்.












Click it and Unblock the Notifications