தமாகாவிலிருந்து குமாரதாஸ் டிஸ்மிஸ்
சென்னை:
தமாகாவின் அதிருப்தி எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்திற்காக குமாரதாஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்.
தமாகாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பலமுறை அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும்குமாரதாசிடமிருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் வரவில்லை. நேரிலும் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.
எனவே டாக்டர் குமாரதாஸ் தமாகாவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் இதரப் பொறுப்புகளிலிருந்தும்நீக்கப்படுகிறார் என்று அவ்வறிக்கையில் வாசன் கூறியுள்ளார்.
காங்கிரசுடன் தமாகா சேர்ந்தாலும் தன்னை தமாகா எம்.எல்.ஏவாகவே கருத வேண்டும் என்று சமீபத்தில் தான்குமாரதாசும் வேறு நான்கு அதிருப்தி எம்.எல்.ஏக்களான எம்.ஏ. ஹக்கீம், ஆர். ஈஸ்வரன், எஸ்.எஸ். மணி நாடார்மற்றும் செ.கு. தமிழரசன் ஆகியோர் சபாநாயகர் காளிமுத்துவிடம் கடிதம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கடந்த வாரம் குமாரதாசை சஸ்பெண்ட் செய்த தமாகா தலைமை ஹக்கீம் மற்றும் ஈஸ்வரன்ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் மணி நாடாரை சமாதானப் படுத்தும் முயற்சியில் தமாகா இறங்கியுள்ளது. ஆனால் தமாகாவில் இல்லாததமிழரசன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டுத் தான் எம்.எல்.ஏ. ஆகியுள்ளதால் அவர் மீது என்ன நடவடிக்கைகஎடுக்கலாம் என்று தெரியாமல் தமாகா முழித்து வருகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications