சென்னை போலீசாரிடம் ஜெ. குறைகேட்பு: இடமாற்றம் கோரி விண்ணப்பங்கள் குவிந்தன
சென்னை:
போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியின் கடைசிக் கட்டமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னைமாநகரப் போலீசாரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியை கடந்த ஜூலை 26ம் தேதிஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து கடந்த 20 நாட்களில் தெற்கு, மேற்கு, மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களைச் சேர்ந்த 7,000க்கும்மேற்பட்ட போலீசார், ஜெயில் காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோரிடம் குறைகளைக்கேட்டறிந்த ஜெயலலிதா, அவர்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
கடந்த 7ம் தேதி வடக்கு மண்டலப் போலீசாருடன் சென்னை மாநகரப் போலீசாரையும் ஜெயலலிதா சந்தித்து குறைகேட்பதாக இருந்தது. ஆனால் அந்த ஒரே நாளில் 3,000க்கும் மேற்பட்ட போலீசாரைச் சந்திக்க முடியாது என்பதால்வடக்கு மண்டலப் போலீசாரை மட்டும் அன்று அவர் சந்தித்தார்.
இந்நிலையில் இன்று காலை தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் சென்னை மாநகரப் போலீசாரைச் சந்தித்துஅவர்களுடைய குறைகளை ஜெயலலிதா கேட்டறிந்தார்.
இன்று மட்டும் மொத்தம் 1,764 போலீசார், ஜெயில் காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஜெயலலிதாவைச்சந்தித்து தங்கள் குறைகளைக் கூறி மனுக்களையும் கொடுத்தனர்.
பெரும்பாலானவர்கள் தங்களுக்கு இடமாற்றம் வேண்டுமென்று கோரியே மனுக்களைக் கொடுத்தனர்.
இத்துறைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களும் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்து மனுகொடுத்துள்ளனர்.
முன்னதாக போலீசார் முன்பாக ஜெயலலிதா பேசுகையில்,
இந்தியாவிலேயே தமிழகக் காவல்துறை தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அந்த அளவுக்கு தமிழகப் போலீசார்சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
சட்டம்-ஒழுங்கைக் காப்பதிலும் தமிழகப் போலீசார் தான் சிறந்து விளங்குகின்றனர்.
மேலும் நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகஉள்ளது. இதே நிலையே தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
போலீசாரின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார் ஜெயலலிதா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications