பாபா படப் பெட்டி கடத்தல்: தியேட்டருக்கு தீ வைப்பு- ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு
ஜெயங்கொண்டம்:
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொணடத்தில் பாபா படம் திரையிடப்பட்ட தியேட்டர் மீது கடும் தாக்குதல் நடந்தது.தியேட்டருக்கு தீ வைத்துவிட்டு படப் பெட்டியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
அதைத் தடுக்க முயன்ற தியேட்டர் ஊழியர்ளுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
நேற்று இந்தப் படத்தின் ப்ரி-வியூ காட்சி சென்னையில் நடந்தது. ரஜினியின் அமெரிக்க குரு சச்சிதானந்த சுவாமி உள்படமுன்னணி நடிக, நடிகையர் இந்தப் படத்தை நேற்று பார்த்தனர்.
இன்று தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் ரஜினியின் பாபா படம் ரிலீஸ் செய்யப்பட்டது. காரைக்குடியில் இந்தப் படத்தைமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் பாபா படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் அலை மோதியது. ரஜினியுடன் பாட்டாளி மக்கள் கட்சி மோதிவருவதால் அனைத்துத் தியேட்டர்களுக்கும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
பாட்டாளி மக்கள் கட்சி பலமாக உள்ள வட மாவட்டங்களில் திரையரங்குளில் ஒருவித பதற்றம் நிலவியது. இதனால் இந்தமாவட்டஙகளில் தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று காலை பா.ம.க. செல்வாக்கு இல்லாத பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் ஒரு தியேட்டரில்தாக்குதல் நடந்துள்ளது.
இந்த நகரில் உள்ள ரங்கம் திரையங்கில் இன்று பாபா படம் வெளியிடப்படுவதாக இருந்தது. இதற்காக நேற்று நள்ளிரவு 2.30மணிக்கு பாபா படப் பெட்டி இந்த தியேட்டருக்கு வந்து சேர்ந்தது.
பெட்டி வந்து சேர்ந்த ஒரு மணி நேரத்தில் சுமார் 3.30 மணியளவில் 25 பேர் கொண்ட ஒரு குழு தியேட்டருக்குள் அதிரடியாகநுழைந்தது. தியேட்டர் மேனேஜர் மாரியப்பனின் அறைக்குள் புகுந்த இவர்கள் பாபா படப் பெட்டியைத் தருமாறு கேட்டனர்.
அவர் தர மறுக்கவே மாரியப்பனை அவர்கள் அரிவாளால் வெட்டினர். பின்னர் பாபா படப் பெட்டியை எடுத்துக் கொண்ட அந்தமர்ம நபர்கள் தியேட்டரை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். கேன்டீனையும் அதன் ஊழியரையும் தாக்கினர்.
பின்னர் திரையரங்குக்குள் நுழைந்து திரைக்கும் (ஸ்கிரீன்) தீ வைத்தனர். நாற்காலிகளை உருட்டுக் கட்டைகளால் உடைத்து வீசிஎறிந்தனர். அதை அணைக்க வந்த ஊழியர்களை அடித்து உத்ைதனர்.
இதையடுத்து பாபா படப் பெட்டியுடன் அந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்தனர். தியேட்டருக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்த விவரம் தெரியாமல் படத்தைப் பார்ப்பதற்காக காலை 6 மணிக்கே ரஜினி ரசிகர்கள் தியேட்டருக்கு வர ஆரம்பித்தனர். வந்தபின்னர் தான் தியேட்டர் எரிக்கப்பட்ட விவரமும் படப் பெட்டி கடத்தப்பட்ட விவரமும் அவர்களுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் கலவரத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், பெரும் அளவில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்த போலீசார்அவர்களை அடக்கி விரட்டி விட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அவ்வளவாக செல்வாக்கு கிடையாது. இங்கு தமிழர் தேசியப் படைபோன்ற இயக்கத்தினரின் செயல்பாடு உண்டு.
ஆனால், இன்னும் இந்தத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. போலீசாருக்கும் தாக்குதலில் தொடர்புடையவர்கள்குறித்து ஏதும் துப்பு துலங்கியதாகத் தெரியவில்லை.
-
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி! -
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications