திமுகவினர் மீது போலீஸ் தாக்குதல்: மதுரை மேயர், முன்னாள் சபாநாயகருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை:
மதுரையில் திமுகவினர் நடத்திய நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியின் போது போலீசார் நடத்தியதாக்குதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மற்றும் மதுரைமாநகர மேயர் செ. ராமச்சந்திரன் ஆகியோர் உள்பட 100 திமுகவினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனைஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 9ம் தேதி மதுரை-செல்லூர் பகுதியில் ஏழை நெசவாளர்களுக்காக கஞ்சித் தொட்டி திறந்த திமுகவினர்,இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் மு.க. ஸ்டாலின், பழனிவேல்ராஜன், ராமச்சந்திரன், முன்னாள்அமைச்சர் தா. கிருஷ்ணன் உள்பட பலரையும் அழைத்திருந்தனர்.
ஆனால் இதற்காக திமுகவினர் அமைத்த மேடைக்கு அருகிலேயே நெசவாளர்களுக்கு முட்டை பிரியாணிவழங்குவதற்காக அதிமுகவினர் மற்றொரு மேடை போட்டிருந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திமுகவினர் மீதுபோலீசார் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இதில் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பலத்தகாயமடைந்தனர். ஸ்டாலின் சிறிது தாமதமாக வந்ததால், போலீசார் தாக்குதலிலிருந்து தப்பி விட்டார்.
பின்னர் பழனிவேல்ராஜன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 100 திமுகவினரைப் போலீசார் கைது செய்தனர். மூன்றுநாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த கிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் ஐந்துதிமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே பழனிவேல்ராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளிட்ட 100 திமுகவினர் தங்களுக்கு ஜாமீன்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அனைவரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.
அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார்.
முன்னதாக, கைது செய்யப்பட்ட அனைத்து திமுகவினருமே கடந்த வாரம் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன்கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்களுடைய மனுக்களை அந்த நீதிமன்றம் நிராகரித்து விட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications