இலங்கை அமைதிப் பேச்சுக்கு அமெரிக்கா வரவேற்பு
வாஷிங்டன்:
இலங்கையில் அடுத்த மாத மத்தியில் துவங்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இலங்கை அமைச்சர் மாரகோடாவும் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கமும்சமீபத்தில் நார்வேயில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
அப்போது செப்டம்பர் 12ம் தேதியிலிருந்து 17ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் பேச்சுவார்த்தையைத் துவக்கஇரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து செப்டம்பர் 2ம் தேதியிலிருந்து 7ம் தேதிக்குள் புலிகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கும்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கூறியது போல் நிச்சயம் தடை விலக்கிக் கொள்ளப்படும் என்றும்இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ஆனால் புலிகளின் தனி ஈழம் கோரிக்கையை மட்டும் ஏற்க மாட்டோம் என்றும் நேற்று இலங்கை அரசுதெளிவாகக் கூறிவிட்டது.
இந்நிலையில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வரவேற்புஅளித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையை நாங்கள் முழுவதுமாக வரகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளரான பிலிப் ரீக்கர் இன்று கூறினார்.
இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டும் என்றும் ரீக்கர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications