பா.ம.கவினருக்கு விழும் திட்டு
சென்னை:
பாபா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களின் வெளியேயும் உள்ளேயும் பாட்டாளி மக்கள் கட்சியினரையும்அதன் தலைவர் ராமதாஸையும் ரஜினி ரசிகர்கள் கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்க்கின்றனர்.
ரஜினி குறித்து பாமக தலைவர் ராமதாஸ் கூறிய கருத்துக்கள் அவரது ரசிகர்களிடையே கோபத்தைஏற்படுத்தியுள்ளன. இதைப் பல வழிகளிலும் அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சென்னையில் ரஜினியின் படங்களை எப்போதும் திரையிட்டு வரும் ஆல்பட் தியேட்டரில் தான் இம்முறை"பாபா"வும் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தவிர நகருக்குள் 7 தியேட்டர்களிலும், புறநகர்ப்பகுதிதியேட்டர்களிலும் "பாபா" திரையிடப்பட்டுள்ளது.
இந்தத் தியேட்டர்களில் அதிகாலையிலேயே ரஜினி ரசிகர்கள் குவிந்து விடுகின்றனர். தங்களது தலைவரின்படத்திற்கும், கட் அவுட்டிற்கும் மாலை அணிவித்து, பாலாபிஷேக வழிபாடுகள் செய்கின்றனர்.
ஏராளமான பணத்தை செலவழித்து ரஜினி ரசிகர்கள் வைத்திருந்த கட் அவுட்களும் போஸ்டர்களும்தியேட்டர்களை அலங்கரிக்கின்றன. சூடம் காட்டி பூஜை செய்யவும் ரசிகர்கள் தவறுவதில்லை.
அத்தோடு பாட்டாளி மக்கள் கட்சியினரைத் திட்டித் தீர்க்கவும் ரசிகர்கள் தவறவில்லை. ராமதாஸ், அவரது கட்சி,தொண்டர்கள் என அனைவருக்கும் குண்டக்க மண்டக்க திட்டுக்கள் விழுகின்றன.


Click it and Unblock the Notifications
