தேர்தல் கமிஷன் அதிரடி: பா.ஜ.கவின கனவில் மண்
அகமதாபாத்:
குஜராத்தில் உடனடியாகத் தேர்தல் நடத்த முடியாது என்று கூறி பாரதிய ஜனதாவின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது தேர்தல்கமிஷன்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை சட்ட மன்றத்தின் ஆயுட்காலம் இருந்தாலும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுசட்டசபையையும் கலைத்தார் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடி.
அங்கு நடந்த மதக் கலவரங்களால் பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் உடனடியாகத் தேர்தல் நடத்த பா.ஜ.க.தலைமையும் மோடியும் முடிவு செய்து மூன்று வாரங்களுக்கு முன் சட்டசபையை கலைத்தனர்.
அங்கு உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரினர். ஆனால், குஜராத்தில் நிலைமையை நேரில் ஆராந்த தேர்தல் கமிஷன்அங்கு உடனடியாகத் தேர்தல் நடத்த முடியாது என்று நேற்று இரவு அறிவித்துவிட்டது. இதன்மூலம் பா.ஜ.கவுக்கு அரசியல்ரீதியில் பெரும்அடி விழுந்துள்ளது.
குஜராத்தின் 25 மாவட்டங்கள்ல் 24 மாவட்டங்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாலும், லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில்வசிப்பதாலும், மக்கள் வீடுகளுக்குத் திரும்பி வர முடியாத அளவுக்கு அந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை இருப்பதாலும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மாநில அரசு தவறிவிட்டதாலும் அங்கு உடனடியாகத் தேர்தல் நடத்தும் சூழ்நிலைஇல்லை என்று நிலைமையை வெட்டவெளிச்சமாக சுட்டிக் காட்டியுள்ளது தேர்தல் கமிஷன்.
முதலில் தேர்தல் கமிஷனின் 27 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழு குஜராத்தில் நிலையை ஆராந்தது. பின்னர் தலைமைத் தேர்தல்ஆணையர் லிங்டோ தானே நேரடியாக குஜராத் சென்றார். அகதி முகாம்களையும் எரிக்கப்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில்பார்வையிட்டார்.
அப்போது குஜராத்தில் அமைதி நிலவுவதாக தனக்கு தவறான தகவல்கள தந்த மாநில அரசின் மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளைநடுரோட்டில் வைத்துத் திட்டித் தீர்த்தார் லிங்டோ. (இதை பா.ஜ.க. கண்டித்தது என்பது நினைவுகூறத்தக்கது)
பொய்யான தகவல்களைத் தருகிறீர்களே. உங்களுக்கு அறிவில்லை? இப்படி ஒரு அதிகாரியாக பணியாற்றுவதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டும் என்று லிங்டோ திட்டியபோதே அவர் அங்கு உடனடியாகத் தேர்தல் நடத்த மாட்டார் என்பது பா.ஜ.கவுக்குப் புரிந்து போனது.இதையடுத்து அவர் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டியது.
ஆனால், பா.ஜ.கவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் ஏதும் தராமல் இருந்து வந்த லிங்டோ நேற்றிரவு அந்தக் குஜராத் தேர்தலை ஒத்தி வைக்கும்தனது முடிவை அறிவித்தார்.
அங்கு நவம்பர் அல்லது டிசம்பரில் தான் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறிவிட்டார். மதக் கலவர சூடு தணிவதற்குள் தேர்தல் நடத்திஅரசியல் அறுவடை செய்ய நினைத்திருந்த பா.ஜ.கவின் திட்டத்துக்கு மிகப் பெரிய அடி விழுந்துள்ளது.
குஜராத்தில் லட்சக்கணக்கான சிறுபான்மையினர் வீடுகள் எரிக்கப்பட்டுவிட்டதால் முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீடுகட்ட ரூ. 2,500யை மாநில அரசு வழங்கியுள்ளது. இதை வைத்துக் கொண்டு வீட்டுக்கு ஒரு பக்க சுவர் கூட கட்ட முடியாது என்பதால்அவர்கள் தொடர்ந்து முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரிகளும் பா.ஜ.கவினரும் சிறுபான்மையினரின் பெயர்களை வாக்காளர்பட்டியல்களில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் பல லட்சம் சிறுபான்மையினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதையும்தேர்தல் கமிஷன் கண்டுபிடித்துள்ளது.
முதலில் இந்தப் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டால் தான் அங்கு தேர்தல் நடத்துவோம் என்று மாநில முதல்வர் நரேந்திர மோடியிடம்தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மோடியின் திட்டங்களை கமிஷன் தவிடுபொடியாக்கியுள்ளது.
மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை மாநில அரசு கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பதால் குஜராத்தில் நிலைமை சீரகவில்லை.இதனால் அங்கு தேர்தலை நடத்த முடியாது என்று லிங்டோ கூறியுளளார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தங்களிடம் மாநில அரசு பல உண்மைகளை மறைத்துவிட்டதாகவும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.ஒரு மாநிலத்தில் சட்டசபை கலைக்கப்பட்டால் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். ஆனால், தேர்தல் கமிஷனின் இந்தமுடிவால் அடுத்த சட்டசபை அமைக்கப்படுவது தாமதமாகும். இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாகவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சட்டசபையைக் கலைத்துவிட்டு தானே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது தேர்தலை நடத்திவிடத் திட்டமிட்டிருந்த பா.ஜ.கவின்திட்டமும் இதன் மூலம் கலைந்துவிட்டது.
அங்கு ஜனாதிபதி ஆட்சியில் கீழ் தேர்தல் நடத்தும் சூழநிலையை தேர்தல் கமிஷன் உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை கேவலப்படுத்தி அவர்களைக் கண்டுகொள்ளாமல் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழச் செய்தது நரேந்திரமோடியின் அரசு. அரசின் அந்தச் செயலே இப்போது பா.ஜ.வுக்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications