அரசுக்கு பிரச்சனை தர மாட்டேன்: கெஞ்சுகிறார் சந்திரிகா
கொழும்பு:
நாடாளுமன்றத்தை இடையில் கலைத்து ரணில் விக்கிரமசிங்கே அரசுக்குத் தொல்லை தர மாட்டேன் என அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி தந்துள்ளார்.
அதே நேரத்தில் நாடாளுமன்றத்தைத் தாமாகவே கலைத்துவிட்டு இடைத் தேர்தல் நடத்தும் முடிவையும் ரணில் கைவிடவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சபாநாயருக்கு சந்திரிகா கடிதம் எழுதியுள்ளார்.
இதுவரை ரணில் அரசுக்கு அதிகாரத் தோரணையில் தான் சந்திரிகா உத்தரவுகள் பிறப்பித்து வந்தார். இப்போது தான்முதல்முறையாக ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் சந்திரிகா என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளுடன் பேச்சுவார்த்தையை எதிர்த்த சந்திரிகா நாடாளுமன்றத்தைக் கலைப்பேன் என மிரட்டினார். இதையடுத்துநாடாளுமன்றத்தை தானே கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் அதிபரின் அதிகாரங்களைபெருமளவு குறைக்கவும் ரணில் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து சந்திரிகா இறங்கி வந்துள்ளார்.
பிரதமர் ரணிலின் நெருங்கிய சகாவும் நாடாளுமன்ற சபாநாயகருமான ஜோசப் மைக்கேல் பெரைராவுக்கு சந்திரிகா குமாரதுங்காஎழுதியுள்ள கடித விவரம்:
திடீர் தேர்தல் நடத்துவதால் நார்வே உதவியுடன் விடுதலைப் புலிகளுடன் அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளில் பாதிப்புஏற்படலாம். அரசுக்கு பெரும்பான்மை பலம் இருக்கும் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன்.
கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை தேர்தல் நடந்துவிட்டது. இதனால், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கும்போதுநாடாளுமன்றத்தைக் கலைத்து பிரச்சனை ஏற்படுத்த மாட்டேன் என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் சந்திரிகா.
கோரிக்கை நிராகரிப்பு:
ஆனால், சந்திரிகா இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது.
சந்திரிகாவின் ஆதரவாளராக இருந்து ரணிலுக்கு ஆதரவாக அணி மாறிய மூத்த அமைச்சர் திஸ்ஸநாயகே கூறுகையில்,இதுபோல உறுதிமொழிகள் தந்துவிட்டு பின்னர் அதை மதிக்காமல் நடந்து கொள்வது சந்திரிகாவுக்கு கை வந்த கலை.
அதிபரின் அதிகாரக் குறைப்புக்கு முதலில் சம்மதித்த சந்திரிகா பின்னர் அதை நிராகரித்தார். இதனால் அவரது உத்தரவாதங்களைஏற்க இயலாது என்றார்.
எனவே, சந்திரிகாவின் அதிகாரங்களைக் குறைக்க விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படுவது உறுதி என்றுதெரிகிறது. இலங்கை அரசியல் சட்டத்தின் இந்த 18 வது திருத்தம் குறித்து நாளை அமைச்சரவையில் விவாதம் நடக்கிறது.அடுத்த மாதத் துவக்கத்தில் இந்தச் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.
இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 20 எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு எம்.பிக்களின் ஆதரவுக்கும் அதிகமான ஆதரவுடன் இச் சட்டம் நிறைவேறுவது
உறுதியாகிவிட்டது.
கட்சியின் கட்டளையை மீறி வாக்களிக்கும் எம்.பிக்களின் பதவிப் பறிப்பையும் இச் சட்டம் தடை செய்யப் போவதால் எதிர்க் கட்சிஎம்.பிக்கள் தைரியமாக இதை ஆதரித்து வாக்களிப்பர் என்று தெரிகிறது.
ஒரு வேளை இச் சட்டத்துத்து போதிய எம்.பிக்களின் ஆதரவு கிடைக்காமல் போனால் அரசின் மீதே நம்பிக்கை வாக்கெடுப்புநடத்திவிட்டு ஆட்சியைக் கலைத்துவிட ரணில் தீவிரமாக உள்ளார்.
சட்டத் திருத்தம் நிறைவேறிய பின்னர் அதை சந்திரிகா ஏற்க மறுத்தாலும் ஆட்சியைக் கலைத்துவிட்டு இடைத் தேர்தலைச் சந்திக்கரணில் உறுதியாக உள்ளார்.
தாய்லாந்தின் செப்டம்பரில் புலிகள்- அரசு இடையே பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில் இந்த அரசியல் திருப்பங்கள்மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.












Click it and Unblock the Notifications