பாபா தியேட்டர் உரிமையாளர் கடத்தல்
விருதாச்சலம்:
விருதாச்சலத்தில் பாபா படத்தைத் திரையிட்ட தியேட்டரின் உரிமையாளர் கடத்திச் செல்லப்பட்டார். இதையடுத்து அந்தத் தியேட்டரில்பாபா படத்தை காட்டுவது நிறுத்தப்பட்டுவிட்டது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் சந்தோஷ்குமார் பேலஸ் என்ற திரையரங்கு உள்ளது. இது பாலகிருஷ்ணன் நாயர் என்பவருக்குச்சொந்தமானது. இந்தத் தியேட்டரை ராஜகோபால் என்பவர் குத்தகைக்கு எடுத்து அதில் பாபா படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு விருதாச்சலம் ரெட்டித் தெருவில் உள்ள ராஜகோபாலின் வீட்டுக்கு 10 பேர் கொண்ட ஒருகும்பல் பைக்குகளிலும் கார்களிலும் வந்தது. வீட்டைத் தட்டி பாபா படம் குறித்துப் பேச வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
இதையடுத்து ராஜகோபால் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அவரை அந்தக் கும்பல் அப்படியே அள்ளி காரில் போட்டுக் கொண்டுதப்பிவிட்டனர்.
இதையடுத்து அங்கு பெரும் பீதி நிலவுகிறது. அந்தத் தியேட்டரில் பாபா படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. அவரைக் கடத்திச்சென்றது யார் என்று தெரியவில்லை. கடந்த சில நாட்காகவே பாபா படத்தைத் திரையிடக் கூடாது என்று இந்தத் தியேட்டருக்குதொலைபேசி மிரட்டல் வந்த வண்ணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயங்கொண்டத்தில் பாபா படப் பெட்டி கடத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ள நிலையில் படத்தைத் திரையிட்ட தியேட்டர் உரிமையாளரேகடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தவிர பாட்டாளி மக்கள் கட்சியினர் மிரட்டல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாபா படம் திரையிடப்படுவதுநிறுத்தப்பட்டுவிட்டது. பண்டுருட்டி, திண்டிவனம், கடலூர் ஆகிய இடங்களில் பாபா படத்தை பெரும்பாலான தியேட்டர்கள்திரையிடவில்லை.
இந்த மாவட்டங்களில் தான் தமிழகத்திலேயே அதிக விலைக்கு படப் பெட்டிகள் விற்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications