லதா ரஜினியின் "ஆக்கிரமிப்பு": ரசிகர்கள் ஆவேசம்
சென்னை:
ரசிகர்கள் டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்திருந்த சீட்டுகளில், நடிகர் ரஜினிகாந்த் மனைவியான லதா ரஜினிகாந்த்நடத்தும் ஆசிரமம் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து உட்கார்ந்திருந்ததால் சென்னை தியேட்டரில்பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள "சத்யம்" தியேட்டரில் "பாபா" படம் திரையிடப்பட்டுள்ளது. இங்குஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு விசேஷ காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக லதா ரஜினியின் ஆசிரமம் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியரும், லதாவின் சிறப்புஅழைப்பாளர்களும் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் சீட்டுகளில் அமரத் தொடங்கினர்.
அதேசமயம், லதாவின் அழைப்பாளர்கள் அமரத் தொடங்கிய சீட்டுகளில் ரிசர்வ் செய்திருந்த சுமார் 200ரசிகர்களும் உள்ளே வரத் தொடங்கினர். தங்களது சீட்டுகளில் ஆசிரமம் பள்ளியைச் சேர்ந்தவர்கள் இருப்பதைப்பார்த்து அவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழ்நலை ஏற்பட்டது.
இதுகுறித்து தியேட்டர் நிர்வாகிகளிடம் ரசிகர்கள் புகார் செய்தனர். ஆனால் அவர்களோ அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதையடுத்து ஆவேசப்பட்ட ரசிகர்கள் தியேட்டர் ஊழியர்களிடம் வாக்குவாதம்செய்தனர். ஆனால் அவர்களோ ரசிகர்களை அடிக்காத குறையாக விரட்டத் தொடங்கினர்.
இதனால் பொங்கி எழுந்த அனைத்து ரசிகர்களும் போலீஸாரை அணுகினர். போலீஸார் விரைந்து வந்தனர்.ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகளில் இருந்த மாணவ-மாணவிகளை வேறு சீட்டுகளுக்கு மாறுமாறு கூறினர்.அவர்களும் சப்தம் போடாமல் சீட்டுகளை காலி செய்து விட்டு சென்றனர்.
இதையடுத்து ஆசிரமம் பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கு பக்கத்தில் உள்ள "சாந்தம்" மற்றும் "ஸ்ரீ" தியேட்டர்களில்சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் படமே வேண்டாம் என்று கூறி விட்டு பாதிப் பேர்குடும்பத்துடன் வீட்டுக்குத் திரும்பி விட்டனர்.
"சத்யம்" தியேட்டர் மீது ரசிகர்களின் புகாரின் பேரில் மோசடி வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
