"பாபாவுக்கு ஆதரவாய் அரசியல் கட்சிகள்
கரூர்:
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாமகவினரும் ரஜினி ரசிகர்களும் ஒருவரையொருவர் தாக்கிப் போராட்டம்நடத்திக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் இது தொடர்பாக பாமகவைத் தாக்கி அரசியல் கட்சிகளும் பேசிவருகின்றன.
ரஜினி கூறுவது சரியே - இளங்கோவன்:
வீரப்பன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு ரஜினியைவிமர்சிப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறினார்.
வீரப்பன் பல கொலை-கொள்ளைகளில் ஈடுபட்டு காட்டுக்குள் வாழ்ந்து வரும் ஒரு வன்முறையாளன். அவனைப்பற்றி ரஜினி கூறியது முற்றிலும் சரியே என்று கரூரில் நிருபர்களிடம் இளங்கோவன் கூறினார்.
"மலிவு விளம்பரம் தேடும் ராமதாஸ்":
இதற்கிடையே இந்து முன்னணி அமைப்பாளரான ராம கோபாலனும் ராமதாசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
தர்மபுரியில் நிருபர்களிடம் ராம கோபாலன் பேசுகையில்,
மலிவான விளம்பரம் தேடும் அரசியல் நோக்குடன் தான் ரஜினி எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை ராமதாஸ்பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதைக் காரணம் காட்டி இளைஞர்களிடம் பாசமழையைப் பொழிந்து நடிக்கிறார் ராமதாஸ். அவர் நடத்துவதுஎல்லாம் அரசியல் நாடகம் தான்.
ரஜினி நல்லவர். அவருடைய நடவடிக்கைகள் மூலம் பலர் திருந்தியுள்ளனர். தெய்வீக நோக்கில் இளைஞர்களைஅடியெடுத்து வைக்கத் தூண்டியவர் ரஜினி. அவரது வழி நல்ல வழி.
ஜாதி மற்றும் கட்சி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ரஜினி ரசிகர்கள் என்றார் ராம கோபாலன்.
ராமதாஸுக்கு இது தேவையில்லாதது - இல. கணேசன்:
"பாபா" படம் குறித்து ராமதாஸ் விமர்சனம் செய்தது தேவையில்லாத ஒன்று என்று பா.ஜ.கவின் அகில இந்தியப்பொதுச் செயலாளர் இல. கணேசனும் கூறினார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் பேசிய அவர்,
வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியது சிலருக்கு வேண்டுமானால் ஆத்திரத்தைஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
ராமதாஸ் எங்கள் கூட்டணியில் தான் உள்ளார். ஆனால் தவறு யார் செய்தாலும் நாங்கள் கண்டிப்பாக அதைத்தட்டிக் கேட்போம் என்றார் கணேசன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications