27ல் காவிரி நதி நீர் ஆணைய கூட்டம்: வாஜ்பாய் நடவடிக்கை
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டம் வரும் 27ம் தேதி கூட்டப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகவும் உரிய நீரைத் தர மறுத்ததையடுத்து ஆணையத்தையும், கண்காணிப்புக் குழுக்கூட்டத்தையும் புறக்கணிப்பதாக தமிழகம் அரசு அறிவித்தது. உடனடியாக நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்குஉத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் உடனடியாக காவிரிக் கண்காணிப்புரக் குழு கூடி இரு மாநில நீர் இருப்பை ஆராயஉத்தரவிட்டது. அதே போல இந்தக் கூட்டம் நடந்த ஒரு வாரத்தில் ஆணையத்தின கூட்டத்தையும் பிரதமர் கூட்ட வேண்டும் எனஉத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று கண்காணிப்புக் குழு கடந்த 9ம் தேதி கூடியது. அந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்குத் தண்ணீர்திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், அதை கர்நாடகம் மீண்டும் ஏற்க மறுத்தது.
இந் நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 27ம் தேதி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் வாஜ்பாய் முடிவுசெய்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கையை இன்று தமிழக, கர்நாடக மற்றும் கேரள, பாண்டிச்சேரி முதல்வர்களுக்கு மத்திய அரசுஅனுப்பியது.
இன்று துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி வந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் பிரதமர் வாஜ்பாய்இதனைத் தெரிவித்தார்.
இதையடுத்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
காவிர் நடுவர் மன்றத்தின் ஆணைப்படி தமிழகத்துக்கு உரிய நீரைத் தர கர்நாடகம் இன்னும் மறுத்து வருகிறது. கடும்மழையினால் கபினி அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள உபரி நீரைத் தான் தமிழகத்துக்கு திறந்துவிட்டு வருகிறது. தரவேண்டிய நீரை தர கர்நாடகம் தொடர்ந்து மறுக்கிறது என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications