சீரழியும் தமிழக கல்வித் தரம்: தம்பித்துரை ராஜினாமா செய்ய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

தமிழகத்தில் கல்வியின் தரம் மிகவும் சீர்கெட்டு வருவதற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தம்பித்துரைராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.

இது தொடர்பாக திருநெல்வேலியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

கடந்த ஒரு ஆண்டுக் காலத்தில் தமிழகத்தில் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்து விட்டது.

எனவே இதற்குப் பொறுப்பேற்று தம்பித்துரை உடனே தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

தமிழகத்தில் வறட்சியும் பஞ்சமும் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் மாநிலத்திற்கு அதிகமான நிதியை ஒதுக்கமத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்த வேண்டும்.

வரும் 28ம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் முக்கியமானமுடிவுகள் எடுக்கப்படும் என்றார் இளங்கோவன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+