ரஷ்ய ஹெலிகாப்டரை வீழ்த்திய தீவிரவாதிகள்: 105 பேர் பலி
அச்கோய்-மர்த்தான் (ரஷ்யா):
ரஷ்யாவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை செசன்ய தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 105ராணுவ வீரர்கள் உடல் சிதறி இறந்தனர். மேலும் 33 பேர் பலத்த காயமடைந்தனர்.
எம்.ஐ.-26 ரகத்தைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் தான் இதுவரை உலகில் தயாரிக்கப்பட்டஹெலிகாப்டர்களிலேயே பெரிதானது என்று கருதப்படுகிறது.
சுமார் 140 பேருடன் இந்த ஹெலிகாப்டர் செசன்யா பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென்று வெடித்துச்சிதறியது.
இதில் 105 ரஷ்ய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மற்ற அனைவருமே பலத்த காயமடைந்தனர்.
இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த 17 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தான் ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியுள்ளது என்று முதலில் கருதப்பட்டது.ஆனால் தாங்கள் தான் ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியதாக செசன்ய தீவிரவாதிகள் தெரிவித்தனர்.
ஆனால் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இதை மறுத்தார். ஹெலிகாப்டர்என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தான் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால் செசன்ய தீவிரவாதிகள் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதை பின்னர் ரஷ்யா ஒப்புக் கொண்டு விட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
செசன்ய தீவிரவாதிகளும் முஸ்லீம் தீவிரவாதிகள் தான். இவர்களுக்கும் சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
இதுவரை நடந்த போரில் இத்தனை ரஷ்ய வீரர்களை செசன்ய தீவிரவாதிகள் ஒரே நாளில் கொன்றுள்ளது இதுவேமுதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications