காரைக்குடியில் தவறான சிகிச்சையால் பெண் நோயாளி உயிரை பறித்த போலி டாக்டர்
காரைக்குடி:
காரைக்குடியில் தொடர்ந்து தவறான சிகிச்சை அளித்து பெண் சிறுநீரக நோயாளி ஒருவரின் உயிரைப் பறித்தபோலி டாக்டரைப் போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி கம்பன் மணி மண்டபம் வீதியில் "குளோபல் கிட்னி சென்டர்" என்ற பெயரில் மூலிகைச் சாறு மூலம்சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமனை ஒன்றை காணிக்கைராஜ் என்பவர் நடத்தி வந்தார்.
தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக சிறுநீரக நோயாளிகள் வந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூரைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் தன்னுடைய மனைவி தாமரைச் செல்வியை கடந்தபிப்ரவரி 25ம் தேதி காணிக்கைராஜின் மருத்துவமனையில் சேர்த்தார்.
ஆரம்பத்திலேயே சிவஞானத்திடமிருந்து ரூ.30 ஆயிரம் வாங்கிய காணிக்கைராஜ், அது இது என்று ரூ.77 ஆயிரம்வரை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தாமரைச் செல்வி சமீபத்தில் பரிதாபமாகஉயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிவஞானம் காரைக்குடி டி.எஸ்.பியிடம் இது குறித்து புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது காணிக்கைராஜ் ஒரு போலி டாக்டர் என்பது தெரியவந்தது. மேலும் ரத்தத்தில் யூரியாவின் அளவைக் குறைத்துக் காண்பித்து சான்றிதழ் அளிப்பதற்காக அவரேபோலியான ஒரு லேப்பையும் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து காணிக்கைராஜைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.












Click it and Unblock the Notifications