ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த அரசு கல்லூரி மாணவர்கள்
சென்னை:
அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும்கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆதரவாக 60 அரசுக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன்இணைக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
ஆனால் இதற்கு இன்னும் ஜனாதிபதியின் அனுமதி பெறப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 60 அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக அந்தக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் இன்று போராட்டத்தில்குதித்தனர்.
இன்று கல்லூரி வகுப்புக்களைப் புறக்கணித்த மாணவ-மாணவிகள் அரசுக் கல்லூரிகளைபல்கலைக்கழகங்களுடன் இணைக்கக் கூடாது என்று கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவ-மாணவிகள் இன்று இப்போராட்டத்தை நடத்தினர்.
இதற்கிடையே தமிழக கல்வி அமைச்சர் தம்பித்துரை மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோர் அரசுக் கல்லூரிஆசிரியர்களுடன் பேச்ச நடத்தி போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை முதல்காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் உண்ணாவிரதம்:
இதற்கிடையே தங்களுடைய 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் எழிலகத்தின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அதே போல் மதுரையில்கோரிப்பாளையத்திலும் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம்நடைபெறுகிறது.
தங்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் வரும் செப்டம்பர் 3ம் தேதி சிறைநிரப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications