நடமாடும் அரசு மருத்துவமனைகள்: தமிழகத்தில் அறிமுகம்
சென்னை:
கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் நடமாடும் மருத்துவமனைகளை தமிழக அரசு இனறுஅறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.
இத் திட்டத்திற்காக ரூ. 1 கோடி செலவில் 25 வாகனங்கள் அரசு வாங்கியுள்ளது. தர்மபுரி, சேலம், விழுப்புரம்,ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், மதுரை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக இத் திட்டம்அறிமுகப்படுத்தப்படுகிறது.
பின்னர் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் இது விரிவாக்கப்படும்.
ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு டாக்டர் தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவக் குழு இடம் பெற்றிருக்கும்.வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த நடமாடும் மருத்துவமனை செயல்படும்.
தினமும் குறிப்பிட்ட 5 பகுதிகளுக்கு இந்த நடமாடும் மருத்துவமனை வந்து செல்லும். ஒவ்வொரு வாகனத்திலும்ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மருந்துகள், கருவிகள் வைக்கப்பட்டிருக்கும்.
இதற்கான நிகழ்ச்சி கோட்டையில் நடந்தது. இந்த மருத்துவ வாகனங்களின் சாவிகளை மருத்துவத்துறைஊழியர்களிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார். விழாவில் ஜெயலலிதா பச்சை சேலை அணிந்திருக்கமருத்துவத் துறையின் பெண் ஊழியர்களும் பச்சை சேலைகளில் வந்திருந்தனர்.
மேடையில் சேர்களில் ஆரம்பித்து எல்லாம் பச்சை நிறமே... பச்சை நிறமே..
பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நலத்துறை அமைச்சர் செம்மலை உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications