எல்லாம் சேஷனால் வந்த வினை: ஜெயலலிதா பாய்ச்சல்
சென்னை:
குஜராத்தில் தேர்தல் நடத்தும் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தனது அதிகார எல்லைகளை மீறுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
குஜராத் தேர்தல் விஷயத்தில் மத்திய பா.ஜ.க. அரசு எடுத்துள்ள முடிவை ஆதரிப்பதாக அவர் கூறினார்.
வன்முறை நடந்த அம் மாநிலத்தில் உடனடியாகத் தேர்தல் நடத்த முடியாது என்று கூறிவிட்ட தேர்தல் கமிஷன் அங்கு ஜனாதிபதி ஆட்சியைஅமலாக்க வலியுறுத்தியது. இதை எதிர்த்து ஜனாதிபதியின் ஒப்புதலுடன் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இதன் மீது முடிவெடுக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்சை தலைமை நீதிபதி கிர்பால் நியமிக்கவுள்ளார். இந்த பெஞ்ச் அடுத்த4 அல்லது 6 வாரத்தின் தனது தீர்ப்பை வழங்கும் என்று தெரிகிறது.
இந் நிலையில் தேர்தல் கமிஷன் தனது எல்லையை மீறிவிட்டதாக அந்த அமைப்பின் மீது ஜெயலலிதா பாய்ந்துள்ளார். இந்தியாவின்தேர்தல் முறையை ஒழுங்குபடுத்திய டி.என். சேஷன் மீதும் தனது ஆத்திரத்தைக் கொட்டினார் ஜெயலலிதா.
இன்று சென்னையில் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
மத்திய அரசின் செயல்பாட்டில் தேர்தல் கமிஷன் தலையிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் யோசனையைக் கேட்க மத்திய அரசுமுடிவு செய்திருப்பது சரியான முடிவாகும்.
குஜராத்தில் தேர்தலை ஒத்தி வைத்துள்ள தேர்தல் கமிஷன் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்கக் கூறுவது தவறு. தேர்தல்நடத்துவது மட்டும் தான் அதன் வேலை. என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை. இதுபோல அதிகாரத்தை கமிஷன் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
தேர்தல் கமிஷனின் இது போன்ற செயல்பாடு சேஷன் தேர்தல் கமிஷ்னராக இருந்தபோது தான் ஆரம்பித்தது. சேஷன் போன்றவர்களின்செயல்பாடு இல்லாலும் கூட கடந்த காலத்தில் இந்த நாட்டில் தேர்தல்கள் முறையாக நடந்துள்ளன. அப்போதும் கூட ஜனநாயகம் தளைத்துத்தான் இருந்தது.
எனது இந்தக் கருத்தின் மூலம் குஜராத் கலவரத்தை நான் ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது தனி விஷயம். அங்கு தேர்தல்நடத்துவது என்பது வேறு விஷயம் என்றார் ஜெயலலிதா.
(இந்தியாவின் தேர்தலை ஒழுங்குபடுத்தி கிரிமினல்களை தேர்தலில் இருந்து ஒதுக்கிய சேஷனை ஜெயலலிதா இந்த அளவுக்குபாராட்டியுள்ளதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதிமுக ஆட்சியில் சமீபத்தில் நடந்த பல தேர்தல் தகிடுதித்தங்களை ஒருமுறைநினைவுபடுத்திக் கொண்டால் இதற்கான காரணம் புரியும்!)
சோனியா கனவு காண ஜெ. அனுமதி:
தமிழகத்தில் த.மா.கா- காங்கிரஸ் இணைந்துவிட்டதால் விரைவில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என சோனியா காந்தி பேசியுள்ளதுகுறித்துக் கேட்டபோது பதிலளித்த ஜெயலலிதா,
சோனியா எப்போது வேண்டுமானாலும் கனவு காணலாம். அதை நான் தடுக்க மாட்டேன். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும்எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கனவு காணலாம்.
தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவிடம் இருந்து சம தூரத்தில் விலகி இருக்கிறோம் என்றார்.
காவிரி விவகாரம்:
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தான் தமிழகத்துக்கு நியாயமான தீர்ப்பை வழங்க முடியும். ஒவ்வொரு வாரமும் இவ்வளவு நீரைத்திறந்து விட வேண்டும் என்ற நடுவர் மன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் ஒரு தடவை கூட மதித்து நடந்தது இல்லை. அது தான் பிரச்சனைக்குக்காரணம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications