அப்துல் கலாமை நெருக்கும் மத்திய அரசு
டெல்லி:
கிரிமினல் குற்றம் செய்த அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக இருப்பதால் ஜனாதிபதி கலாம் திருப்பி அனுப்பிய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திருத்தத்தை மீண்டும் அவரிடம் அனுப்பி வைத்து கையெழுத்து வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ஏதாவது வழக்கில் தண்டனை பெற்றிருந்தால் அது குறித்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்குத் தெரிவிக்கவேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு தளர்த்தி புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
வழக்கில் தண்டனை பெற்ற ஒரு அரசியல்வாதி அதை தேர்தல் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை என்றரீதியில் இந்தச் சட்டத்திருத்தம் உள்ளது.
இதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பியது. ஆனால், இந்தச் சட்டம் கிரிமினல் குற்றம் செய்த அரசியல்வாதிகளுக்குஆதரவாக இருப்பதால் அதில் கையெழுத்திட கலாம் மறுத்துவிட்டார்.
விளக்கம் கேட்கும் கலாம்:
வழக்கில் தண்டனை பெற்ற வேட்பாளர் அந்த விவரத்தை தேர்தல் கமிஷனிடம் ஏன் தெரிவிக்கக் கூடாது, அதை ஏன் வேண்டாம் என்றுநினைக்கிறீர்கள் என்று கேட்டு இந்தச் சட்டத் திருத்தத்தை திருப்பி அனுப்பினார் கலாம்.
இது மத்திய பா.ஜ.க. அரசுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தங்களால் ஜனாதிபதியாக்கப்பட்ட கலாம் தாங்கள் சொல்லும் இடத்தில்கையெழுத்துப் போடுவார் என்ற நினைத்திருந்த மத்திய அரசுக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
கலாமுக்கு நெருக்குதல் தர முடிவு:
இதையடுத்து அவருக்கு நெருக்குதல் கொடுத்து அதில் கையெழுத்து வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. சட்டத்திருத்தத்தை கலாம் திருப்பி அனுப்பியது குறித்து இன்று பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அமைச்சரவை விவாதித்து. லண்டனில் இருந்துஇன்று காலை டெல்லி திரும்பிய துணைப் பிரதமர் அத்வானியும் இதில் கலந்து கொண்டார்.
இக் கூட்டத்தில் சட்டத் திருத்தத்தை அப்படியே மீண்டும் கலாமுக்கே அனுப்பி வைக்கவும் அதில் கையெழுத்து போடுமாறு அவரைநிர்பந்திக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எந்த ஒரு விவகாரத்திலும் அமைச்சரவையின் பரிந்துரையை ஒரு முறை தான் ஜனாதிபதியால் நிராகரிக்க முடியும். மீண்டும் அமைச்சரவைநிர்பந்தித்தால் அவர் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும்.
ஆனால், அதே நேரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இந்தச் சட்டத் திருத்த்தை அப்படியே கிடப்பில் போட்டு வைத்து தாமதப்படுத்தவும்ஜனாதிபதிக்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
கலாம் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications