அண்ணா சாலையில் கண்ணகிக்கு சிலை: கருணாநிதி முடிவு
திருவள்ளூர்:
சென்னையில் அண்ணா சாலையில் கண்ணகிக்கு சிலை வைக்க திமுக முடிவு செய்துள்ளது.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கும் அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள திமுக இளைஞரணியின் தலைமையகமானஅன்பகத்துகும் இடையில் உள்ள ரவுண்டானாவில் இந்த சிலை வைக்கப்படவுள்ளது.
கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை ஓட்டை காரணங்களைக் கூறி தமிழக அரசு நீக்கியது. ஜெயலலிதாவின் ஜோதிடர் இதைஅபசகுணம் என்று கூறியதால் தான் சிலை அகற்றப்பட்டதாக எதிர்க் கட்சிகள் கூறியுள்ளன. இந்தச் சிலையை மீண்டும் நிறுவக் கோரும்வழக்கு விசாரணையில் உள்ளது.
இந் நிலையில் தமிழகம் முழுவதும் கண்ணகி சிலைகளை வைக்குமாறு திமுகவினருக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். திமுக பொதுக்கூட்டங்களிலும் கண்ணகி சிலையை வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே சென்னையில் ஜெயலலிதா அடிக்கடி சென்று வரும் அண்ணா சாலையிலேயே கண்ணகி சிலையை வைக்க கருணாநிதிமுடிவு செய்துள்ளார். இந்தச் சிலையை செய்யும் பணி மீஞ்சூரில் நடந்து வருகிறது.
சிற்பி தீனதயாளன் இதனை செய்து வருகிறார். இந்தச் சிலையை கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டார். சில மாற்றங்களையும்செய்யுமாறு உத்தரவிட்டார்.
இந்தச் சிலையை அடுத்த மாதம் நடக்கும் திமுக முப்பெரும் விழாவின்போது நிறுவ கருணாநிதி திட்டமிட்டுள்ளார். ஆனால், இதற்கு தமிழகஅரசு அனுமதி தருமா என்று தெரியவில்லை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications