ரேசன் கடை அரிசி: மக்களுக்கு பணிந்தார் ஜெயலலிதா
சென்னை:
தமிழகத்தில் ரேசன் கடைகளில் அரிசி வாங்க விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அரசுநீக்கியுள்ளது.
முதலில் குறிப்பிட்ட ஊதிய விகிதத்துக்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் அரிசி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.இதன் பின்னர் ரேசன் கார்டைக் காட்டி அரிசிக் கூப்பன வாங்க வேண்டும் என்றது. இந்தக் கூப்பனைக் கொடுத்தால் தான் அரிசிவழங்கப்படும் என்ற உத்தரவு வந்தது.
இதன் பின்னர் ரேசன் கார்டில் குறிப்பிட்டுள்ள குடும்பத் தலைவர் வந்தால் தான் அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தது. வேலைக்குச்செல்லும் ஆண்கள் இதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து அரிசி வாங்கும் நிலை ஏற்பட்டது.
பின்னர் குடும்பத் தலைவர் அல்லது தலைவி வந்து அரிசி வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த அடுத்தடுத்த உத்தரவுகள்,கட்டுப்பாடுகளால் ரேசனில் அரிசி வாங்குவதற்குள் பொது மக்கள் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
பல இடங்களில் ரேசன் கடை ஊழியர்களுக்கும் மக்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டு வந்தது.
மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக விதிமுறைகளை அரசு தளர்த்தியுள்ளது. ரேசன் கார்டில் பெயர் உள்ள யார் வேண்டுமானாலும் வந்துஅரிசி வாங்கிக் கொளளலாம் என்று இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ரேசன் கார்டில் உள்ளவர்களின் பெயர் மற்றும் கையெழுத்துடன் ஒரு கடிதத்தை அட்டஸ்டேசன் பெற்று ரேசன் கடைகளில் ஒப்படைக்கவேண்டும் என்றும், இந்தக் கடிதத்தில் பெயர் உள்ள யார் வேண்டுமானாலும் வந்து அரிசி வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்ஜெயலலிதா.


Click it and Unblock the Notifications
