""நல்ல படமா கொடு தலைவா..."": கோவையில் ரஜினி ரசிகர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

""தலைவா, நல்ல படமா கொடு..."" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு நடிகர் ரஜினிகாந்த்தின் கோயம்புத்தூர்ரசிகர் ஒருவர் சயனைடு சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர் செல்வபுரம் அசோக் நகரைச் சேர்ந்த வண்ணமுத்து என்ற செல்வம் (38) என்பவர் கார் டிரைவராகஇருந்தார்.

தீவிர ரஜினி ரசிகரான வண்ணமுத்து, அவர் நடித்த படங்களை எப்பாடு பட்டாவது முதல் நாளன்றே பார்த்துவிடுவார்.

அதே போல் சமீபத்தில் வெளியான ரஜினியின் "பாபா" படத்தையும் பார்த்தார். வண்ணமுத்துவின் நண்பர்கள்"பாபா" படம் குறித்து பல்வேறு விதமாக அவரிடம் விமரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு ஆர்.எஸ். புரத்தில் உள்ள திவான் பகதூர் சாலைக்கு வண்ணமுத்துவந்தார். பின்னர் அவர் உணவுப் பண்டத்தில் எதையோ கலந்து சாப்பிட்டார்.

சிறிது நேரத்திலேயே அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து வண்ணமுத்துவின் உடலைக் கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்ய கோயம்புத்தூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தான் அவர் சயனைடு சாப்பிட்டது தெரிய வந்தது.

முன்னதாக அவருடைய சட்டைப் பையிலிருந்த மூன்று கடிதங்களைப் போலீசார் கைப்பற்றினர். ஒரு கடிதத்தைரஜினிக்கும், இன்னொரு கடிதத்தைத் தன் மனைவி சாந்தாவுக்கும், மற்றொரு கடிதத்தை அப்பகுதி கவுன்சிலருக்கும்வண்ணமுத்து எழுதியிருந்தார்.

ரஜினிக்கு எழுதிய கடிதத்தில், "என் அன்புத் தலைவர் ரஜினிக்கு... இனி நல்ல படமாகத் தரவும். "பாபா" படம்நன்றாக இருந்தாலும் நல்ல படமாக தரவும்... இப்படிக்கு, உங்கள் ரசிகன் எஸ். வண்ணமுத்து" என்றுஎழுதப்பட்டிருந்தது.

"என் சாவுக்கு நானே காரணம். குழந்தையைப் பார்த்துக் கொள்" என்று தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில்வண்ணமுத்து கூறியிருந்தார். இவர்களுக்கு பேச்சியம்மாள் என்ற மகள் இருக்கிறாள்.

வண்ணமுத்து தற்கொலை பற்றி அறிந்ததும் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+