கேசட், கடிதம் கொடுத்த வீரப்பன்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
நாகப்பாவை ஏன் கடத்தினேன் என்பது குறித்தும் அவரை விடுவிக்க வேண்டுமானால் தமிழக, கர்நாடக அரசுகள் என்ன செய்ய வேண்டும்என்ற நிபந்தனைகள் அடங்கிய ஒரு கேசட்டையும் ஒரு கடிதத்தையும் அவரது குடும்பத்தினரிடம் தந்துவிட்டுச் சென்றுள்ளான் வீரப்பன்.
இந்த கேசட்டும் கடிதமும் அதிரடிப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முதலில் அவன் சி.டி. தந்தாக செய்திகள் வந்தன. ஆனால், அவன் சி.டி. தரவில்லை கேசட் தான் கொடுத்தான் என நாகப்பாவின் மகள்நிருபர்களிடம் தெரிவித்தார். வீரப்பன் கையைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டதாகவும் உடன் இருந்தவர்கள் தான் தமிழில் பேசிமிரட்டியதாகவும் அவர் கூறினார்.
இந்த கேசட்டிலும் கடிதத்திலும் என்ன கூறப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. அவை அதிரடிப்படையினரிடம்ஒப்படைக்கப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications