வீரப்பன் கோரிக்கை நிராகரிப்பு: தேடுதல் வேட்டை தீவிரம்
ஈரோடு:
அதிரடிப்படைகளின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற வீரப்பனின் நிபந்தனையை இரு மாநில அரசுகளும்புறக்கணித்துள்ளன. அவனைத் தேடும் பணியில் தமிழக, கர்நாடக அதிரடிப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இரு மாநிலப் படைகளுக்கும் தேவாரம் தலைமையேற்று இந்தத் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறார். அவருடன் கர்நாடக மாநிலபோலீஸ் அதிகாரிகள் நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தினர்.
40 கம்பெனிகள் கொண்ட அதிரடிப் படையினர் காட்டுப் பகுதியின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியே தேடுதல் வேட்டையில்ஈடுபட்டுள்ளதாக தமிழக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந் நிலையில் ஈரோடு அருகே எஸ்.எஸ். மகால் முகாமில் நிருபர்களிடம் பேசிய தேவாரம், வீரப்பனிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது.அதை வைத்து கூலிக்கு ஆள் பிடிக்க முயன்று வருகிறான். அவனது கும்பலில் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெளடா ஆகியோர் மட்டும்தான் உள்ளனர்.
நேற்று கடத்துலுக்கு உதவியவர்கள் கூலியாட்கள் தான். நாகப்பாவைக் கடத்தியதன் மூலம் மீண்டும் தனது கும்பலின் எண்ணிக்கையைஅதிகரிக்க வீரப்பன் முயல்கிறான். இதனால் தன்னிடம் மற்றவர்கள் வந்து சேருவார்கள் என்று நினைக்கிறான்.
அவனைப் பிடிக்கும் முயற்சிகள் தொய்வில்லாமல் தான் நடந்து வருகின்றன. இப்போதும் தீவிர வேட்டையில் தான் அதிரடிப்படைஈடுபட்டுள்ளது என்றார்.
அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையை நிறுத்தாவிட்டால் நாகப்பாவை தலையை வொட்டிக் கொல்வேன் என வீரப்பன்மிரட்டியுள்ளான். அவனது மிரட்டலை இரு மாநில அரசுகளும் கண்டுகொள்ளவில்லை. தேடுதலை தீவிரப்படுத்தியிருக்கின்றன.
காட்டுப் பகுதியில் டி.ஜி.பி, கமிஷ்னர்:
இந் நிலையில் வீரப்பன் காட்டுப் பகுதிக்கு தமிழக டி.ஜி.பி. நெயில்வால் மற்றும் முன்னாள் அதிரடிப்படையின் துணை கமாணடன்டாகஇருந்த இப்போதைய சென்னை நகர கமிஷ்னர் விஜயகுமாரும் விரைந்துள்ளனர்.
தேவராத்துக்கு விஜய்குமார் சில க்ளூக்களைத் தந்து உதவுவார் என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications