கர்நாடக அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
கொள்ளேகால்:
முன்னாள் கர்நாடக அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறச் சென்ற மூத்த அமைச்சர்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
கர்நாடக அமைச்சர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, காகோடு திம்மப்பா, மகாதேவ், ராஜுகவுடா, மத்திய அமைச்சர்சீனிவாச பிரசாத் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் அல்லம் வீரபத்ரப்பா ஆகியோர் கொள்ளேகால் வந்தனர்.
ஆனால் ராஜுகவுடா தான் நாகப்பா கடத்தப்பட்டதற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் மத்தியில்பேசப்பட்டதால் அவரை வர வேண்டாம் என்று கார்கே கூறிவிட்டார்.
இதையடுத்து ராஜுகவுடாவை மட்டும் தவிர்த்து விட்டு மற்ற அனைத்து அமைச்சர்களும் நாகப்பாவின் வீட்டுக்குச்சென்றனர். அங்கு நாகப்பாவின் மனைவி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்கள் ஆறுதல் கூறினர்.
தன் கணவர் எப்போது வேண்டுமானாலும் கடத்தப்படலாம் என்று தெரிந்தும் தன் குடும்பத்தினருக்கு கர்நாடகஅரசு பாதுகாப்பு அளிக்கத் தவறி விட்டது என்று நாகப்பாவின் மனைவியான பரிமளா அப்போது குற்றம்சாட்டினார்.
மேலும் முதல்வர் கிருஷ்ணா வந்து என்னைப் பார்க்கட்டும், அவரிடம் பேசிக் கொள்கிறேன் என்றும் பரிமளாகோபத்துடன் கூறினார்.
ஆனால் வீரப்பனிடமிருந்து நடிகர் ராஜ்குமாரை மீட்டது போல் நாகப்பாவையும் பத்திரமாக மீட்டு விடுவோம்என்று நாகப்பாவின் குடும்பத்தினரிடம் அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்த அமைச்சர்களை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுற்றி வளைத்துமுற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். ராஜ்குமாரை மீட்பதற்கு அரசு என்னென்ன நடவடிக்கைகளைமேற்கொண்டதோ அதே போலவே நாகப்பாவையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள்கோஷமிட்டனர்.
நாகப்பாவை எப்படியும் மீட்டு விடுவோம். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றுகார்கேயும் சீனிவாச பிரசாத்தும் எவ்வளவோ கூறியும் பொதுமக்கள் தங்களுடைய முற்றுகையைக் கைவிடவில்லை.போலீசார் வந்து மிரட்டியபோது அவர்களையும் மக்கள் திட்டினர்.
அரசையும் அதிரடிப்படையையும் தாக்கி அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
இதையடுத்து நாகப்பாவின் மகன் டாக்டர் பிரீத்தன் வந்து பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார். இதன் பிறகே பொதுமக்கள் தங்கள் முற்றுகையைக் கைவிட்டு அமைச்சர்களுக்குவழிவிட்டனர்.
அரசு நாகப்பாவை மீட்காவிட்டால், நாங்களே காட்டுக்குள் சென்று வீரப்பனை எப்படியாவது சந்தித்து அவனிடம்கெஞ்சியாவது அவரை மீட்போம் என அப் பகுதி மக்கள் கூறினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications