அரசு கல்லூரி ஆசிரியர்களுடன் ஜெ. இன்று பேச்சு
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்க பிரதிநதிகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல்வர் ஜெயலலிதாவுடன்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அரசுக் கல்லூரிகளை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்ட மசோதா ஒன்றும் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவ-மாணவியரும் போராடி வருகிறார்கள். இதனால் அரசுக் கல்லூரிகள் மற்றும்விடுதிகள் மூடப்பட்டுள்ளன. வகுப்புகளும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.அதை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் சங்கப் பிரதிநதிகள் இன்று பிற்பகல் முதல்வரைச் சந்திக்கிறார்கள்.
இருப்பினும், அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றுமட்டுமே முதல்வரிடம் சொல்லப் போவதாக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஜெயலலிதா சம்மதிக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications