சோனியா பிரதமராக ஜெ. கொடுத்த கடிதம்: காங். வெளியிட்டது
டெல்லி:
வெளிநாட்டவரான சோனியா காந்தி பிரதமராக ஒருபோதும் நான் ஆதரித்ததில்லை, இனியும் ஆதரிக்க மாட்டேன் என முதலவர்ஜெயலலிதா வீர வசனம் பேசியுள்ள நிலையில் சோனியா காந்தி பிரதமராக ஆதரவு தருவதாகக் கூறி ஜனாதிபதியிடம் தருவதற்காகஜெயலலிதாவே கைப்பட எழுதிய கடிதத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தை காங்கிரஸ் அதிரடியாக வெளிப்படுத்தி அவரை அரசியல்ரீதியில்கேவலப்படுத்தியுள்ளது.
இந்தக் கடிதம் ஜெயலலிதாவை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் தனது முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டதால்விவகாரத்தை உடனடியாக திசை திருப்பும் வகையில் தான் கருணாநிதிக்கும் நாகப்பா கடத்தலுக்கும் தொடர்புள்ளதாக இரவோடு இரவாகஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயல்பால் ரெட்டி டெல்லியில் இந்த ஜெயலலிதா கடிதத்தை வெளியிட்டார். 1999ம் ஆண்டுமார்ச் 21ம் தேதி இந்தக் கடிதத்தை ஜெயலலிதா எழுதி காங்கிரஸ் கட்சியிடம் தந்துள்ளார்.
அதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் அப்போதைய வாஜ்பாயை அரசுக்குத் தந்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று பா.ஜ.க. அரசைஜெயலலிதா கவிழ்த்தார்.
பின்னர் ஜெயலலிதாவே டெல்லியில் ஒரு டீ-பார்ட்டி நடத்தினார். அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அழைத்து கலந்துகொள்ளச் செய்தார். அந்த டீ பார்ட்டி முடிந்தவுடன் சோனியா பிரதமராக ஆதரவு தெரிவித்து ஒரு கடிதத்தை ஜெயலலிதா காங்கிரஸ்கட்சியிடம் தந்தார்.
கடித விவரம்:
அந்தக் கடிதம் அப்போதைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணனிடம் தருவதற்காக ஜெயலலிதாவால் எழுதப்பட்டது.
அந்தக் கடிதத்தில்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி அமைய அதிமுக ஆதரவு தருகிறது. இது தொடர்பாக 21ம் தேதிநடந்த அதிமுக பார்லிமெண்டரிக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உங்களிடம்அளிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் முறைப்படி அப்போதைய பார்லிமென்டரி அதிமுக குழுத் தலைவர் சேடப்பட்டி முத்தையா கையெழுத்திட்டுள்ளார்.
ஜெய்பால் ரெட்டி பேட்டி:
இந்தக் கடிதத்தை வெளியிட்ட பின்னர் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்ாளர் ஜெய்பால் ரெட்டி ஜெயலலிதாவைமிகக் கடுமையாக சாடினார்.
அவர் கூறியதாவது:
இந்தக் கடிதத்தின் மூலம் 1999ம் ஆண்டு சோனியா காந்தியை பிரதமராக்க ஜெயலலிதாவே எழுத்துப்பூர்வமாக ஆதரவு தந்ததுதெளிவாகிவிட்டது. ஆனால், இப்போது அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டு பேசியுள்ளார். இதற்குக் காரணம் டான்சி வழக்கு தான்.அதில் இருந்து தப்புவதற்காக மத்திய அரசுடன் சமரசம் செய்யும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.
தேசிய அரசியலில் ஜெயலலிதா ஒரு கத்துக் குட்டி. அவரது பேச்சு கற்பனை உலகுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கும்.ஜெயலலிதாவின் வேஷத்தை அவரது கடிதமே கலைத்துவிட்டது.
ஜெயலலிதாவின் டபுள் ஆக்டை வெளிக்காட்டவே இந்தக் கடிதத்தை வெளியிட வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட்டது.வரலாற்றையே பொய்யாக்கிவிட ஜெயலலிதா முயன்றார்.
பொய் சொன்ன ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கோருமாறு வலியுறுத்த மாட்டோம். செய்த தவறுக்கு அவரே பிராயச்சித்தம் தேடிக்கொள்ளட்டும். நாட்டையே தவறான பாதையில் கொண்டு செல்ல ஜெயலலிதா முயன்றார். இதற்கு மன்னிப்பே கிடையாது என்றார் ரெட்டி.
ஜெயலலிதா அப்செட்:
ஆனால், தனது அதிரடி ஸ்டைலில் தனக்கே காங்கிரஸ் கட்சி ஆப்பு வைக்கும் என்று ஜெயலலிதா எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அத்வானியை சந்தித்துவிட்டு வந்து சோனியாவைப் பற்றி தாறுமாறாகப் பேசிய ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் கற்பித்திருக்கிறதுகாங்கிரஸ் கட்சி.
இந்த விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே கருணாநிதி- வீரப்பன் தொடர்பு என்ற குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்ஜெயலலிதா என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications