தூத்துக்குடி காங். அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல்
நாகர்கோவில்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ்- அதிமுக தொண்டர்களிடையே தொடர்ந்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றி முதல்வர் ஜெயலலிதா தாறுமாறாக பேட்டியளித்ததைத் தொடர்ந்துஜெயலலிதாவின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. இதற்குப் போட்டியாக அதிமுகவினர் சோனியாவின்கொடும்பாவியை எரித்தனர்.
சில இடங்களில் இந்தப் போட்டி கொடும்பாவி எரிப்புகள் மோதலில் முடிந்துள்ளன.
காங் அலுவலகம் மீது தாக்குதல்:
தூத்துக்குடியில் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்ததைத் தொடர்ந்து அதிமுகவினர் காங்கிரஸ் கட்சியின்அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் பல்வேறு காங்கிரஸ் தொண்டர்கள் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக 15 அதிமுகவினரைக்கைது செய்த போலீசார் பல காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களை விட்டுவிட்டு தாக்கப்பட்டவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பதற்குகாங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் இளங்கோவன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தாக்கப்பட்ட காங்கிரஸ் அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர், இனிமேல் அதிமுகவுடன்கூட்டணியே கிடையாது என்றார்.
ஜெ. ராஜினாமா செய்ய வேண்டும்:
அடுத்து நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய அவர்,
வீரப்பனைப் பிடிக்க முடியாத ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வீரப்பனைப் பிடிக்கமுடியாத கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று இதே ஜெயலலிதா தான் முன்பு சொன்னார். அவரதுபேச்சு இப்போது அவருக்கே பொறுந்தும்.
தமிழகத்தில் போலீசாரை அரசு தவறான வகையில் பயன்படுத்தி வருகிறது. மாநில சட்டம் ஒழுங்கு நாறிவிட்டதுஎன்றார்.
நன்றி மறந்த ஜெ.:
இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்.பியும் அக்கட்சியின் மனித உரிமைப் பிரிவின் தலைவருமான சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் ஆதரவுடன் வென்றஜெயலலிதா இப்போது நன்றி மறந்துவிட்டார் என்றார்.
இதற்கிடையே பொள்ளாச்சி அருகேஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்த 70 காங்கிரஸ் தொண்டர்கள்இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications