முஸ்லீகள் பாதுகாப்பு: புலிகளுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

முஸ்லீம்களின் பாதுகாப்பு குறித்தும் தாய்லாந்து பேச்சுவார்த்தையின் போது பேச வேண்டும் என்றுவிடுதலைப்புலிகளை இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தவுள்ளது.

இதற்காக இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவரான ரப் ஹக்கீம் அடுத்த சில நாட்களில் லண்டன் சென்றுபுலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

முறையான பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பாகவே முஸ்லீம்களின் பாதுகாப்பு குறித்து புலிகளிடம் நான்பேசுவது நல்லது என்றே நினைக்கிறேன் என்று ஹக்கீம் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

இன வன்முறையின் போது கிழக்கு இலங்கையில் வாழ்ந்து வந்த அதிகமான முஸ்லீம்கள் கடுமையாகப்பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

கடந்த ஜூன் மாதம் கூட வேலைச்சேனை பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டு பல முஸ்லீம்கள் இறந்தனர். இந்தச்சம்பவம் முஸ்லீம்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

எனவே தான் தற்போதைய பேச்சுவார்த்தையின் போது முஸ்லீம்களின் பாதுகாப்பு குறித்தும் கட்டாயம் பேசவேண்டிய அவசியம் உள்ளது என்று முஸ்லீம் தலைவர்கள் கருதுகின்றனர்.

இதையடுத்தே பாலசிங்கத்தை சந்தித்து இது தொடர்பாகப் பேசுவதற்காக ஹக்கீம் லண்டன் செல்லவுள்ளார்.

தாய்லாந்து பேச்சுவார்த்தையின் போது அரசு சார்பில் கலந்து கொள்ளும் குழுவில் ஹக்கீமும் இருப்பார் என்றுதெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+