ஜெ. மன்னிப்பு கேட்க வேண்டும்: வாழப்பாடி
சென்னை:
வெளிநாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமராக வருவதை ஏற்க முடியாது என்று பேசியதமிழக முதல்வர் ஜெயலலிதா இதற்காக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் தமிழககாங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் ஜெயலலிதா இவ்வாறு பேசியுள்ளார். அதற்காக அவர் உடனடியாகமன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
ஜெயலலிதாவின் பேச்சால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவருடைய கொடும்பாவியை எரித்தது சரிதான். அது அவர்களுடைய நியாயமான ஆத்திரம் கூட.
ஆனால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் சோனியாவின் உருவ பொம்மைகளை எரிக்குமாறு அதிமுகதொண்டர்களை ஜெயலலிதா தூண்டி விட்டுள்ளார். மேலும் போலீசார் உதவியுடன் காங்கிரஸ் அலுவலகங்களைத்தாக்கவும் அவர் தான் தூண்டியுள்ளார்.
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகனும் வீரப்பனும் வன்னியர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள்இருவருக்கும் தொடர்பு உண்டு என்று ஜெயலலிதா கூறுவதும் சரியில்லை.
திமுக தலைவர் கருணாநிதிக்கும் வீரப்பனுக்கும் உள்ள தொடர்புகள் கூறித்து ஜெயலலிதா நன்றாக ஆராய்ச்சிசெய்து பி.எச்டி. டாக்டர் பட்டம் கூடப் பெற்று விட்டுப் போகட்டும். அதற்காக இவ்விஷயத்தில் ஏன் ஜாதிப்பெயரை இழுக்க வேண்டும் என்று வாழப்பாடி அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications