ஈரோட்டில் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி
ஈரோடு:
ஈரோட்டில் தொழிற்சாலை கட்டடம் கட்டும்போது அது இடிந்து விழுந்து 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாகபலியானார்கள்.
ஈரோடு அருகே கிருஷ்ணம்பாளையம் என்ற இடத்தில் புதிதாக ஒரு தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்தது. அப்போதுஅங்கு 20 பேர் வரை வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கட்டிடம் இடிந்து விழுந்ததும் தொழிலாளர்கள் அனைவரும் பதறி அடித்து சிதறி ஓடினர். ஆனால் இந்திரா, லட்சுமிஆகிய இரண்டு பெண்களும் மணியன், முத்துச்சாமி மற்றும் ஒருவர் ஆகிய ஐந்து பேரும் இடிபாடுகளில் சிக்கிபலியாயினர்.
காயமடைந்த மற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்குத் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து ஈரோடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு உதவி:
இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி நேரில் சென்றுபார்வையிட்டார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும்ராமசாமி தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications