வாத்தியார்கள் மட்டும் வகுப்பறையில்!
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் திங்கள்கிழமை வகுப்புகளுக்கு வந்திருந்தனர். ஆனாலும் மாணவர்கள்ஸ்டிரைக்கைத் தொடர்ந்ததால், ஆசிரியர்கள் மட்டும் வகுப்பறைகளில் அமர்ந்திருந்தனர்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதைக் கண்டித்து அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஸ்டிரைக்மேற்கொண்டிருந்தனர்.
தற்போது தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு இன்று முதல் அவர்கள் வகுப்புகளுக்குத்திரும்பியுள்ளனர்.
இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமை ஆசிரியர்கள் வகுப்புகளுக்குவந்தபோது, மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, அரசு முடிவை வாபஸ் பெறும் வரை போராடுவோம்என்று கூறி விட்டு வெளியேறினர்.
மாணவ-மாணவிகள் அனைவரும் கல்லூரி வாயில்களின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
சென்னை உள்பட தமிழகத்திலுள்ள அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் திங்கள்கிழமை மாணவர்கள் வகுப்புகளைப்புறக்கணித்தனர். இதனால் ஆசிரியர்கள் மட்டுமே கல்லூரிகளில் இருந்தனர்.












Click it and Unblock the Notifications