கோவா சென்றது தமிழக போலீஸ் படை: கருணாநிதி கைதாவாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை & பனாஜி:

தொல்காப்பியத்துக்கு உரை எழுதுவதற்காக கோவா சென்றுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சென்னைமேம்பால ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கு முகாமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

வீரப்பனின் வளர்ச்சிக்கு கருணாநிதி தான் காரணம் என்றும் கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா அவனால்கடத்தப்பட்டதற்கும் அவருக்கும் தொடர்பு உண்டு என்று சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார்.

கடந்த ஆகஸ்டு மாதம் கூட கருணாநிதி பெங்களூர் சென்று விட்டு வந்த பிறகு தான் வீரப்பன் தன் கைவரிசையைக்காட்டி நாகப்பாவைக் கடத்தினான் என்றும் அதனால் இதற்கும் கருணாநிதிக்கும் நெருங்கிய தொடர்புஉள்ளதாகவும் கூறிய ஜெயலலிதா தற்போது கோவா சென்றுள்ள கருணாநிதியைக் கண்காணிக்க உளவுத்துறைக்குஉத்தரவிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜியான முகமது அலி தலைமையிலான போலீஸ் படை விமானம் மற்றும் ரயில்மூலம் இரு பிரிவுகளாக கோவா விரைந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் மேம்பால ஊழல் வழக்கு தொடர்பாகத் கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி கருணாநிதியையும்அவருடைய மகனும் முன்னாள் சென்னை மாநகர மேயருமான ஸ்டாலினையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தான் கைதுசெய்தனர். அந்த வழக்கில் கருணாநிதி ஜாமீனில் தான் விடுவிக்கப்பட்டார்.

கடந்த பல மாதங்களாக சென்னையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களின் தரம் குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் ஆய்வு செய்து வந்தனர். இந்த மேம்பாலங்களைக் கட்டியதில் நடந்த ஊழல் குறித்தும் அவர்கள்விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் கருணாநிதி கோவாவில் தற்போது இருக்கும் போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் அங்கு சென்றுள்ளதுபல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேம்பால ஊழல் வழக்கு தொடர்பாக கருணாநிதி எந்த நேரத்திலும்அங்கேயே வைத்து கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இல்லாவிட்டால் வீரப்பனுக்கும் கருணாநிதிக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் ஜெயலலிதா கூறியுள்ளகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒருவேளை கருணாநிதி கைது செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.

கோவாவில் உள்ள தன்னுடைய மகள் எழிலின் வீட்டுக்கு அருகே உள்ள ஓட்டலின் ஒரு அறையில் தன் மனைவிதயாளு அம்மாளுடன் தங்கி தொல்காப்பியத்துக்கு உரை எழுதி வருகிறார் கருணாநிதி. பக்கத்து அறையில்துரைமுருகன் தங்கியுள்ளார். இவர்களுக்கு எழில் வீட்டிலிருந்து தான் தினமும் உணவு கொண்டு செல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+