எம்.பி, எம்.எல்.ஏவுக்கு போலீஸ் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பன் நடமாட்டம் உள்ள காட்டுப் பகுதிகளை ஒட்டிய இடங்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் செல்லஅதிரடிப்படை போலீஸார் தடை விதித்துள்ளனர்.
ஈரோடு,தருமபுரி மாவட்டத்தில் உள்ள வீரப்பன் நடமாட்டம் உள்ள காட்டுப் பகுதிக்குள் அதிரடிப்படையினர்தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நாகப்பாவைத் தொடர்ந்து, டாக்டர் ஒருவரை வீரப்பன் கடத்தியுள்ளதாக வந்த தகவலையடுத்து காட்டுப்பகுதியையொட்டியுள்ள முக்கியப் பிரகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோபி தொகுதி எம்.பி. காளியப்பன், சத்தியமங்கலம் எம்.எல்.ஏ. கந்தசாமி ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.
காட்டுப் பகுதிக்குள் போக வேண்டாம் என்றும், போக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிரடிப்படைக்கு தகவல்சொல்லி விட்டுப் போகுமாறும் அவர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications