5 வயது சிறுவனுக்கு நேர்ந்த அநியாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரிட்ஜிலிருந்து கூடுதலாக இரண்டு பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டதற்காக அனாதை ஆசிரமத்தைச் சேர்ந்த 5 வயதுசிறுவன் மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான்.

சென்னை வேளச்சேரியில் ஆத்மாலயா என்ற அனாதை ஆசிரமம் உள்ளது. இங்கு அரவிந்த் என்ற சிறுவன்சேர்க்கப்பட்டிருந்தான். இவனது அம்மா நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு அரசு மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக உள்ளார்.

இவனது அப்பா கூலி வேலை பார்க்கிறார். போதிய சம்பாத்தியம் இல்லாததால் அரவிந்தை வளர்க்க முடியாதநிலை உருவானது. இதனால் அவனை ஆத்மாலயாவில் அவனது பாட்டி சேர்த்து விட்டுள்ளார்.

சமீபத்தில் அரவிந்த் படிக்கும் பள்ளிக்கு அவனது பாட்டி சென்றார். அப்போது அவன் ரொம்ப நாளாகவேபள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் கூறினர்.

இதையடுத்து அந்தப் பாட்டி, ஆத்மாலயாவுக்கு விரைந்தார். அங்கு சென்றுகேட்டபோது, அரவிந்த் பள்ளிக்குச்சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.

ஆனால், அரவிந்த்தை ஹாஸ்டல் நிர்வாகிகள் குளியலறைக்குள் வைத்து பூட்டி வைத்திருப்பதாக சில மாணவர்கள்பாட்டியில் ரகசியமாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து அரவிந்த்தை மீட்ட பாட்டி, அவனது உடல் நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து, ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்து பார்த்தபோது அவன் மிக பயங்கரமாகத்தாக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

அரவிந்த்திடம் விசாரித்தபோது, பசி அதிகமாக இருந்ததால் வழக்கமான தரப்படும் பிஸ்கட் தவிர மேலும் 2பிஸ்கட்டுகள் தருமாறு கேட்டுள்ளான் அரவிந்த். ஆனால் அவர்கள் தர மறுத்துள்ளனர். இதையடுத்து யாருக்கும்தெரியாமல் பிரிட்ஜில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து 2 பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிட்டுள்ளான்.

இதைப் பார்த்து விட்ட ஊழியர்கள், நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர். அவர்கள் அரவிந்த்தை கடுமையாகதாக்கியுள்ளனர். அரவிந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் பய பீதியில்தான் உள்ளான் அந்தஏழைச் சிறுவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+