டாக்டர் பட்டம் பெற்றார் கலாமின் கார் டிரைவர்
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முன்னாள் கார் டிரைவர் கதிரேசன், வரலாற்றுப் பாடத்தில் ஆய்வு செய்துடாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். அப்துல்கலாம் டி.ஆர்.டி.ஓவில் திட்ட இயக்குனராக இருந்தபோது,அவரிடம் கார் டிரைவராகவும், தனி உதவியாளராகவும் பணியாற்றியவர் கதிரேசன். 1986ம் ஆண்டு முதல் 1993ம்ஆண்டு வரை அவர் இந்தப் பணியில் இருந்தார்.
வெறும் பத்தாவது வகுப்பு மட்டுமே படித்திருந்த கதிரேசனை, சும்மா இருக்கும் நேரத்தில் எல்லாம் மேலும்படிக்குமாறு கலாம் தூண்டிக் கொண்டே இருந்தார். இதன் விளைவாக படிக்க ஆரம்பித்த கதிரேசன், வரலாற்றில்எம்.ஏ பட்டம் பெற்றார்.
இதுதவிர எம்.எட், மற்றும் எம்.பில் ஆகிய பட்டங்களையும் வென்றார். இதன் பின்னர் வரலாற்றுப் பாடத்தில்பி.எச்.டியை ஆரம்பித்தார்.
18 வருட பாதுகாப்புத் துறை சேவைக்குப் பின் சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் கதிரேசன். ஓய்வு பெற்றுவீட்டில் ஈசிசேரில் சாய்ந்துவிடாதே என்று கூறி அவரை அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் திட்டத்தில்,பயிற்சி அதிகாரியாகவும் ஆக்கினார் கலாம்.
சமீபத்தில தனது வரலாற்று ஆய்வுப் படிப்பை முடித்தார் கதிரேசன். சில தினங்களுக்கு முன் நெல்லைமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இவரது ஆராய்ச்சியை ஏற்று டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
ஒரு கார் டிரைவர் வரலாற்றில் ஆராய்ச்சி செய்து டாக்டராகி புதிய வரலாறு படைத்துள்ளார்.
எனது இந்தச் சாதனைக்கு டாக்டர் கலாம்தான் முழுக்க முழுக்கக் காரணம் என்று கண்களில் நீர் பணிக்கச்சொல்கிறார் டாக்டர் கதிரேசன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications