வீரப்பன் காட்டில் 60 இடங்களில் தகவல் பெட்டிகள்
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த தகவல் தெரிந்தால் அதிரடிப்படைக்கு ரகசியமாகத் தெரிவிக்கவிரும்புவோருக்கு வசதியாக காட்டுப் பகுதியில் 60 இடங்களில் தகவல் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிரடிப்படைதெவித்துள்ளது.
வீரப்பனைத் தேடும் பணியில் தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகஅதிரடிப்படையினர் வீரப்பன் குறித்தத் தகவல்களைத் திரட்ட புது முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மலைப் பகுதி கிராமங்கள் உள்ள இடங்களில் 60 இடங்களில் தகவல் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டியில் வீரப்பன் குறித்தத்தகவல் தெந்தவர்கள் அதில் தங்களது பெயர், இடம் குறிப்பிடாமல் தகவல் தெவிக்கலாம்.
8 மணி நேரத்துக்கு ஒரு முறை இந்தப் பெட்டி திறக்கப்பட்டு அதில் உள்ள தகவல்கள் பெறப்படும்.
இந்த வசதியைப் பயன்படுத்தி வீரப்பன் குறித்து பகிரங்கமாக தெரிவிக்க அச்சப்படும் கிராமத்தினர், அதிரடிப் படைக்குத் தகவல் தெரிவித்துஉதவுமாறு மலைக் கிராம மக்களுக்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications