மதுரையில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம், பேரணி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் மேலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் வெறியாட்டத் தாக்குதல்நடத்தியது மற்றும் கைது செய்ததைக் கண்டித்து மதுரையில் இன்று மாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் பேரணி நடத்தினர்.

மேலூர் அரசுக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி மைதானத்தில், கொளுத்தும் வெயிலில், கொட்டகை கூட போடாமல் உண்ணாவிரதம்இருந்தனர். அதேபோல, மதுரையிலும் பல்வேறு கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

மன்னர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போலீசாருக்கு எதிராக கோஷம்எழுப்பியபடி ஊர்வலம் சென்றனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறும், போலீஸ் தாக்குதல் குறித்து விசாரணை செய்யவும் மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மதுரை கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சைதாப்பேட்யை பனகல் மாளிகை முன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடி கைது மற்றும் போலீஸ் தாக்குதலைக் கண்டித்தனர்.

பின்னர் போலீஸார் அவர்களுடன் பேசி சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இன்று போலீசார் கையில் லத்தியை எடுக்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

அரசு தொடர்ந்து பிடிவாதம்:

அதே நேரத்தில் பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைப்பது தொடர்பான முடிவில் எந்தமாற்றமும் இல்லை என தமிழக கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.

மதுரை அருகே மேலூரில் அரசுக் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய வெறித் தாக்குதலின்போதுகாயமடைந்த மாணவர்களை மேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் தம்பித்துரை பார்த்தார்.

அதேபோல, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரிக்கும் சென்று ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போதுமானபாதுகாப்பு கொடுக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர் (போலீஸ் பாதுகாப்பா!!). எனவே யாரும்அச்சப்படத் தேவையில்லை.

மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின் உரியநடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுக் கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது என்ற முடிவில் மாற்றம் இல்லை, அதைமறுபரிசீலனை செய்ய முடியாது என்றார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாவிரதம்:

மேலூர் மற்றும் மதுரை கல்லூரி மாணவ, மாணவிகளை போலீஸார் தாக்கியதைக் கண்டித்து வரும் 12ம் தேதிமாநிலம் தழுவிய தர்ணா மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த விடுதலைச் சிறுத்தைகள் டிவு செய்துள்ளது.

இந்த அமைப்பின் துணை பொதுச் செயலாளர் சக்திவேல் இதுகுறித்துக் கூறுகையில், மதுரை மற்றும் மேலூரில்கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதைக் கண்டித்து 12ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் மற்றும்தர்ணா போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

ஆசிரியர்களும் போராட்டம்:

இதேபோல, மாணவர்களை தாக்கியதைக் கண்டித்து ஆசிரியர்கள் சார்பில் வரும் 8ம் தேதி மதுரையில் தர்ணாநடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6ம் தேதி இந்திய மாணவர் சங்கம் சார்பிலும் சாலை மறியல் நடத்தப்படவுள்ளது.

மாணவர்கள் மீதும் சில தவறுகள்:

இதற்கிடையே போராட்டம் நடத்தும் மாணவர்கள் பக்கமும் சில தவறுகள் இருப்பதை நாம் சுட்டிக்காட்டியாகவேண்டும்.

சாலையில் மறியல் நடத்தும்போது சில மாணவர்கள் அந்தப் பக்கம் யார் வந்தாலும் தாறுமாறான வார்த்தைகளைஉபயோகித்து அவர்களை அங்கிருந்து விரட்டுவது, லேட்டஸ்ட் ஹிட் பாடல்களைப் பாடுவது ஆடுவது, கானாபாடல்களை கோரசாகப் பாடுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

இதனால் போராட்டத்தின் தீவிரம் குறைவதோடு, பொது மக்களின் ஆதரவும் மாணவர்களுக்குக் கிடைக்காமல்போய்விடுகுறது.

சில மாணவர்களே இப்படி போராட்டத்தின் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்கின்றனர். இது போன்ற செயல்களால்ஏதாவது ஒரு பொறி கிளம்பி, அது பெரும் மோதலில் வந்து முடிகிறது என்பதையும் வருத்தத்துடன் சொல்லியாகவேண்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+