தமிழகத்துக்கு நீர் தந்ததை எதிர்த்து ரயில் மறியல்
மாண்டியா:
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை எதிர்த்து மாண்டியாவில் விவசாயிகளும் மாணவர்களும் ரயில் மறியல் மற்றும் சாலைமறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் மைசூர்- பெங்களூர் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மைசூர்- பெங்களூர் ரயிலுலையும் மாண்டியாவில் இவர்கள் தடுத்து நிறுத்தினர்.
நாளை முதல் இந்தப் போராட்டம் தீவிரமாக உள்ளது. நாளை மாண்டியா மாவட்டம் முழுவதும் பந்த் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்உண்ணாவிரதரப் போராட்டம் நடத்தவும், 8ம் தேதி முழு அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் விவசாய சங்கத்தினரும் பல்வேறுஅரசியல் கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.
மேலும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டையும் முற்றுகையிடவும் நீர் திறந்துவிடப் படுவதைத் தடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவிவசாய சங்கத்தின் தலைவர் மாடே கெளடா கூறியுள்ளார். மேலும் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவை முதல்வர் மீற வேண்டும் என்றும்தேவைப்பட்டால் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த மாவட்டத்தில் போராட்டங்களை இவர் தான் முன்னின்று நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவட்டத்திலும் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். விவசாய சங்கத்தின் மிரட்டலும் அரசியல் கட்சிகள்,மாணவர்களின் போராட்டமும் இவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications