10ம் தேதி வாஜ்பாய் அமெரிக்கா பயணம்
வாஷிங்டன்:
வரும் 10ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் வாஜ்பாய் அதிபர் ஜார்ஜ் புஷ் உள்பட பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப்பேசுகிறார். ஆனால், அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபை சந்திக்க வாஜ்பாய் மறுத்துவிட்டார்.
அமெரிக்காவில் பின் லேடன் கும்பல் தாக்குதல் நடத்தி ஓராண்டு காலம் முடியப் போகிறது. இது தொடர்பாக ஐ.நாவில் நடக்கும் மாநாட்டில்பங்கேற்க அனைத்து நாட்டுத் தலைவர்களும் அமெரிக்கா வருகின்றனர்.
இதில் பங்கேற்க வாஜ்பாயும் நியூயார்க் செல்கிறார். 15ம் தேதி வரை அவர் அங்கிருப்பார்.
12ம் தேதி அவர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்கிறார். புஷ் பதவியேற்ற பின்னர் இப்போது தான் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 11ம் தேதி நியூயார்க்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் அனைத்து நாட்டுத் தலைவர்களுடன் சேர்ந்து வாஜ்பாயும்மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துகிறார். டுவின் டவர்ஸ் இடிந்ததில் மரணமடைந்த சில இந்தியர்களின் குடும்பத்தினரையும் வாஜ்பாய்சந்திக்கிறார்.
அந்தக் கட்டடம் இடிந்ததில் 220 இந்திய வம்சாவளியினர் உயிரிழந்தனர். இதில் 20 பேர் அங்கு பணிபுரிய விசாவில் சென்றனர்.
வாஜ்பாய் அமெரிக்காவில் இருக்கும்போது அவரையும் முஷாரபையும் சந்திக்க வைத்துவிட பல நாடுகளும் முயன்றன. ஆனால், இந்தச்சந்திப்புக்கு வாய்ப்பே இல்லை என இந்தியா தெளிவாகக் கூறிவிட்டது.
ஒவ்வொரு முறை அமெரிக்கா செல்லும்போதும் அமெரிக்காவில் வாழும் யூத இனத் தலைவர்களை வாஜ்பாய் சந்திப்பது வழக்கம். இந்தமுறையும் யூத இனத் தலைவர்களை வாஜ்பாய் தனது ஹோட்டல் அறையிலேயே சந்திக்க உள்ளார்.
13ம் தேதி ஐ.நா. சபையில் வாஜ்பாய் உரையாற்றுகிறார். பல்வேறு இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கிறார்.அமெரிக்காவில் வாழும் இந்திய முஸ்லீம்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேச உள்ளார்.
14ம் தேதி நியூயார்க், நியூஜெர்ஸி, கனெக்டிகட் ஆகிய மாகாணங்களின் செனட்டர்களையும், இந்த மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்கநாடாளுமன்ற உறுப்பினர்களையும் வாஜ்பாய் சந்திக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த புத்தகத்தையும் வாஜ்பாய் வெளியிடுகிறார்.
15ம் தேதி அவர் சர்வதேச பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார். அன்றைய தினமே இந்தியாவுகுத் திரும்புவார்.
புஷ் இந்தியா வருகை:
இதற்கிடையே அமெரிக்க அதிபர் புஷ் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா வரத் திட்டமிட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறைவட்டாரங்கள் தெரிவித்தன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications